கல்முனை மாநகரசபை சுகாதாரப்பகுதி

வைத்திய அதிகாரி மீது ஊழியர்கள் பலத்த குற்றச்சாட்டு!

 – .எச்.சித்தீக் காரியப்பர்

கல்முனை மாநகர சபையால் சுகாதார பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள வைத்திய அதிகாரி தங்களுடன் கடுமையாக நடந்து கொள்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அங்கு கடமை புரியும் பெரும்பாலான ஊழியர்கள் இது தொடர்பில் மேயர் நடவடிக்கை எடுக்காவிடின் கவனயீர்ப்புப் பேராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அனைவரும் கையொப்பமிட்ட தங்களது கோரிக்கையையும் கல்முனை மேயரிடம் கொடுத்துள்ளனர்.
அண்மைக் காலமாகப் புதியவர்கள் பலர் வேலைப் பகுதிக்கும் சுகாதாரப் பகுதிக்கும் வருகை தந்து ஒப்பமிட்டுச் செல்வதனையும் தாங்கள் அவதானிப்பதாகவும் அந்தக் கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (கடிதத்தின் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்முனை மாநகர சபையில் நீண்ட காலமாகப் பணி புரியும் ஊழியர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் கோரி கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.
கல்முனை மேயராக நிசாம் காரியப்பர் பதவியேற்ற பின்னர் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வருந்தத்தக்கது.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஒருவர் நடந்து கொண்ட விதம் தொடர்பில் எதிர்ப்புத் தெரிவித்து அண்மையில் அங்கு கடமையாற்றும் ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமை தெரிந்ததே.
இதேவேளை, கல்முனை மேயர் அவர்கள் கக்கூஸ் ஒன்றைத் திறந்தாலும் படத்துடன் செய்தி போடும் தன்னை ஊடகவியலாளர் எனக் கூறிக் கொள்ளும் அஸ்லம் மௌலானா என்பவர் மாநகர சபைக்கு எதிரான எந்த விடயங்களையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்றும் நிருபர்கள் அவ்வாறான செய்திகளை ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பக் கூடாது என்றும் கெஞ்சிக் கேட்கிறாராம்.
கக்கூஸ் திறந்தாலும் படத்துடன் செய்தி போடும் அஸ்லம் மௌலானாவே! நீங்கள் அந்தப் பிரதேச மக்களின் கஷ்டங்கள், மாநகர சபை ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் ஆதங்கங்கள் தொடர்பிலும் மனிதாபிமானத்துடன் நோக்குங்கள்.
நீங்கள் நடுநிலைமையான ஊடகவியலாளரா அல்லது நடு நாயகத்தின் ஊடக இணைப்பாளரா? பக்கச் சார்பாக நடந்து கொள்ளாதீர்கள்.

இப்படிக் கேவலம் கெட்டு நடந்து கொண்டு ஊடகத்துறையை மாசுபடுத்தாதீர்கள். உங்களது கள்ளத்தனமும் குள்ள நரிப் புத்தியும் எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் மாநகர சபையில் கடமை புரிகிறீர்கள் என்பதற்காக இவ்வாறெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top