கிழக்கு மாகாண சபை அமளி துமளி பற்றிய 
ஓர் சிறுபார்வை....!!

துறையூர் .கே மிஸ்பாஹுல் ஹக்)

அண்மையில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்ற செயலின் விளைவால் அரசாங்கம், பொதுபலசேனா ஆகியவற்றைக் கண்டித்து முஸ்லிம் காங்கிரஸ்  கிழக்கு மாகாண சபையில் அவசரப் பிரேரணை  ஒன்றை முன் மொழிந்து  உரையாற்ற முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவர்  .எம். ஜெமீல் அவர்கள் அனுமதி கோரியபோது தவிசாளர் ஆரியபதி கலப்பதியினால் அனுமதி மறுக்கப்பட்டதன் விளைவால் சபையில் அமளிதுமளி ஏற்படுத்தப்பட்டு சபை ஜுலை  16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
இது பற்றி கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் அவர்கள் தான் கொண்டு வந்திருந்த பிரேரணை ஏற்கனவே நிகழ்ச்சி நிரலில் உள் வாங்கப்பட்டிருந்ததாகவும் முஸ்லிம் காங்கிரஸ் அணியினர் அவசரப்பிரேரணை ஒன்றை முன்மொழிந்து ஆரம்ப உரையாற்றஅனுமதிகோரியபோதேதவிசாளர் ஆரியபதி கலப்பதியினால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பிழையை முஸ்லிம் காங்கிரஸ் அணியினர் தலைமீது போட்டார்.
ஏற்கனவே, நிகழ்ச்சி நிரலில் இப் பிரேரணை உள் வாங்கப்பட்டிடுப்பின் முஸ்லிம் காங்கிரஸின் அவசரப் பிரேரனை அவசியமற்றதும் தாங்கள் தான் இதைக் கொண்டு வந்தோம் என மக்களிடம் காட்டவும் கொண்டு வரப்பட்டஒன்றாகவுமே பார்க்க வேண்டியுள்ளது.
மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் அவர்களால் கொண்டுவரப்படட் இப் பிரேரனைக்கு அரைமணி நேரமே ஒதுக்கப்பட்டதாக மாகாண அமைச்சர் உதுமாலெப்பை அவர்கள்  கூறியுள்ளார். இப் பிரேரனை தொடர்பான விடயங்களிற்கு அரைமணி நேரம் போதுமா? என்ற வினா இங்கே எழவாய்ப்புள்ளது.
இலங்கையில் உள்ள முஸ்லிம் மாகாண சபைகளில் கிழக்கு மாகாண சபையே முஸ்லிம்களின் ஆதிக்கம் கூடிய ஒருசபை.எனவேஅச் சபை அமர்வில் இப் பிரேரனைக்கே முதன்மை இடத்தை வழங்கி இருக்கவேண்டும் என்ற முஸ்லிம் காஙிரஸின்  கோரிக்கையும் நியாயமானதுதான்.
மேலும், முஸ்லிம் காங்கிரஸ் அணியினர் அவசரப் பிரேரணை கொண்டுவர சபை ஆரம்பமாக முன் தவிசாளருக்கும் ,உரிய அமைச்சர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கவேண்டும் என்ற மாகாணசபைச் சட்டத்தை பின் பற்றியதாகவும் தெரியவில்லை. மாகாணசபைச் சட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ்  பின்பற்ற தவறி இருப்பின் இப் பிரேரனை நிராகரிக்கப்பட்டதினதும் இச் சபை குழம்பியதற்கான முழுப் பொறுப்பையும் முஸ்லிம் காங்கிரஸ் . அணியினரே ஏற்க வேண்டும். சட்டத்திற்குபுறம்பான எச்செயலையும் தவிசாளரினால் மேற் கொள்ளமுடியாத   பக்க நியாயத்தையும்  நாம்  ஏற்கத்தான்  வேண்டும்.
இவ் அனுமதி மறுப்பிற்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை அவர்களும் உடந்தையாக இருந்து முஸ்லிம்களிற்கு வரலாற்று துரோகத்தை இழைததிருந்தார்; என அவர்மீது குற்றம் சுமத்தி அது பொய்யாக இருந்தால் விவாதத்திற்கு வாருங்கள் என்ற பாணியில் முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவர் ஏ.எம். ஜெமீல் அவர்கள் அறை கூவல் விட்டிருந்தார்.
இவ் விவாத அழைப்பிற்கு மாகாணஅமைச்சர் உதுமாலெப்பை அவர்களும் கிழக்கு மாகாண 12 கட்சித் தலைவர்கள் மத்தியில் தயாராக இருப்பதாகப திலளித்துள்ளார்.
தற்கால இலங்கையின் நிலவரத்தின் படி முஸ்லிம்களைஅழிக்கத் துடிக்கும் இன வாதிகளுக்க இது தீனிபோடும் செயலாகஅமையாதா..?
மாகாணஅமைச்சர் உதுமாலெப்பை அவர்களின் கருத்துக்களை வைத்துப் பார்க்கும் போதும் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் அவர்களின் கருத்துக்களை வைத்துப் பார்க்கும் போதும் தாங்கள் இப் பிரேரனைக்கு எதிரானவர்கள் அல்ல என்றே  கூறியுள்ளார்கள்.
அப்படியானால் யாவரும் ஒன்றினைந்து ஏன் இப் பிரேரனையை கொண்டுவர முடியாது?
அப்படி யாவரும் ஒன்றினைந்து இப் பிரேரனையை கொண்டு வரும் போது,விவாதங்கள் இன்றியே இங்கே பொய்யுரைப்பவர்களின் முகங்கள் தெளிவாக அடையாளம் காட்டப்படும்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top