இராமனைப் போல் ராசா இருந்தால்தான்
அனுமான் போல் சேவகனும் இருப்பான்!

-.எச்.சித்தீக் காரியப்பர்--

அளுத்கமை, பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பிரேரணை ஒன்றினை முன்வைப்பது குறித்து அண்மையில் கிழக்கு மாகாண சபையில் எழுந்த பிரச்சினைகள் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. சில வேளைகளில் பொதுபல சேனாவையும் முஸ்லிம்களையும் ஒரே மேசைக்குக் கொண்டு வந்து சமாதானமாக அனைத்தையும் தீர்த்து விடக் கூடியதாகவிருந்தாலும். கிழக்கு மாகாண சபை முஸ்லிம் உறுப்பினர்களிடையே இன்று எழுந்துள்ள அமளிதுமளியான நிலைக்கு தீர்வு காண்பது கஷ்டம் போல் தெரிகிறது.
அளுத்கமை, பேருவளை சம்பவங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் அவசரப் பிரேரணை ஒன்றை முன்மொழிந்து உரையாற்ற முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அனுமதி கோரியிருந்த நிலையிலும் தவிசாளரால் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இந்த விடயத்தில் தவிசாளர் தவறு எதனையும் செய்யவில்லை. சட்டத்தின் அடிப்படையிலேயே அதற்கான அனுமதியை வழங்க முடியாது என்று கூறியுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் வேறு இரு கட்சிகளின் முஸ்லிம் உறுப்பினர்கள் இருவர் முஸ்லிம்கள் தொடர்பில் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து இரு பிரேரணைகளை வெவ்வேறாக முன்னரே சமர்ப்பித்திருந்த நிலையில் கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வுக்கு முதல் தினத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரின் பிரேரணையை எடுத்துக் கொள்வதில் எழுந்த சில சிக்கல்கள் காரணமாகவே அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்பதே உண்மை.
ஜெமீலினால் கையளிக்கப்பட்ட பிரேரணை தனி நபர் பிரேரணையா அல்லது கட்சியின் பிரேரணையா என்பது தொடர்பிலும் சில வாதப்பிரதிவாதங்கள் உள்ளன. கட்சியின் கடிதத் தலைப்பில்தான் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் அதனை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுவதற்கான விதிமுறைகள் வேறானவை.
இவ்வாறான நிலைமைகளால் கிழக்கு மாகாண சபையின் கடைசி அமர்வு அமளி துமளிப்பட்டதால் அது ஒத்தி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபையில் சட்டத்தின் ஆட்சிப்படி நோக்கின் தவறுகள் விடுபடப்பட்டமை முஸலிம் காஙகிரஸ் தரப்பில்தான் என்பதே யதார்த்தம். அன்றைய சபை அமர்வின் போது முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் நடந்து கொண்ட விதம் கூட அந்தச் சபையின் சட்ட ஆட்சியைக் கேள்விக் கூத்தாக்கி இருந்தது. அன்றைய கால தமிழக சட்ட சபை போன்று இங்கும் நாற்காலிகளைத் தூக்கி வீசி கலவரம் செய்தனர். செங்கோலை வெளியே கொண்டு வைத்தனர். தெற்கில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் தாங்கள் அமர்வதற்கே நாற்காலிகள் இல்லாமல் உள்ள நிலையில் இந்த அரசியல்வாதிகள் நாற்காலிகளைத் தூக்கியெறிந்தே அரசியல் நாற்காலிகளுக்கு ஆசைப்பட்டதனை சிங்கள தொலைக்காட்சிகள் கூட காணொளியாக ஒளிபரப்பி நாட்டுக்குக் காட்டிய துரதிர்ஷ்டமான நிலைமை ஏற்பட்டிருந்தது.
உண்மையிலேயே இது வருந்தத் தக்கவிடயமே தாங்கள்தான் முஸ்லிம்களுக்காகப் பேசவேண்டுமென்ற பிடிவாதத் தன்மையின் விளைவே அன்றைய சம்பவங்கள். முஸ்லிகள் தொடர்பில் யார் பேசினாலும் சரி என்றெதொரு விட்டுக் கொடுப்பு ஏதாவது ஒரு பக்கத்திலிருந்து வந்திருந்தால் இன்று இந்த நிலை எழுந்திருக்காது. தெருத் தெருவாய் கூட்டுவதுதான் பொதுநலத் தொண்டு என்பார்கள். ஆனால் அதை விட்டு விட்டு ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுய நலமுண்டு என்பார்கள் இந்த நிலைமைதான் அங்கு ஏற்பட்டது.
இதேவேளை, முஸ்லிம் மீது தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு வட மாகாண சபையில் கடந்த வியாழன்று கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் வன்முறைச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அஸ்மினால் முன்மொழியப்பட்ட இந்தப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் உறுப்பினர் ஒருவரே வழிமொழிந்த நிலையில் குறித்த கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அங்கு இரு இனத்தினதும் உறுப்பினர்களின் ஐக்கியம் பரஸ்பர புரிந்துணர்வு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு கிழக்கு மாகாண சபையில் தங்களுக்குள்ளே அடிப்பட்டுக் கொண்ட முஸ்லிம் உறுப்பினர்கள் முகத்தில் கரியைப் புசியதுடன் நல்லதொரு பாடத்தையும் கற்றுக் கொடுத்தது. கிழக்கு மாகாண சபையில் குறித்த பிரேரணை எடுக்கப்பட்டிருந்தால் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் முழுமையான ஆதரவையும் வழங்கியிருப்பர் என்பது நிச்சயம்.
மக்கள் நலம்.. மக்கள் நலம்.. என்று கூறிக் கொள்ளும் சிலர் தம் கட்சி நலனில் காட்டிய அக்கறையால் தான் தேசிய முக்கியவத்துவமிக்க ஒரு விடயம் அங்கு இல்லாமல் போய்விட்டது.
இதேவேள, கிழக்கு மாகாண சபையில் தங்களது பிரேரணைதான் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று முண்டியடித்துக் கொண்டோர் தெற்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு கடையடைப்புக்கு அல்லது கண்டனப் பேரணிக்குக் கூட அழைப்பு விடுக்காமை அவர்களது கட்சி அரசியல் நலத்தை மட்டுமல்ல.. மத்திய அரசின் விசுவாசத்தையும் அப்படியே வெளிக்காட்டியுள்ளது.
ஆனால், தென்னிலங்கையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் பேரணி ஒன்றினை வடமாகாண சபை ஏற்பாடு செய்திருந்தது. அத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்தே இதனை நடத்தியிருந்தது. இதனைக் கூட செய்ய முடியாத கையாலாகத்தனமும் சுயநல அரசியலும் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் இன்று கிழக்கில் அதிகளவில் உள்ளனர் என்பதனை அங்குள்ள மஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள இதனை விட வாய்ப்பு இன்றைய நிலையில் இல்லை.
கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி என்ற மாதிரிதான் இவர்கள் எல்லாம் போகும் வழி அமைந்து விடுகிறது.
வடக்கிலுள்ள தமிழர்களும் தமிழ்க் கட்சிகளும் தெற்கில் பாதிக்கப்ட்ட முஸ்லிம்களுக்காக ஒற்றுமை நின்று குரல் கொடுத்து பேசி பேரணிகள் நடத்த கிழக்கிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களை மறந்து தங்கள் கட்சிக்காகவும் சுயநலத்துக்காவும் அஞ்சல் ஓட்டப் போட்டி நடத்துவது வெட்கக் கேடானது. இதனை தென்னிலங்கை முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதேவேளை, இராமனைப் போல் ராசா இருந்தால்தான் அனுமான் போல் சேவகனும் இருப்பான் என்பதனையும் மக்கள் இலகுவில்
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top