இறைவனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா?

நாம் சுவைகளை அனுபவிக்க உதவும் அற்புதமான சுவைமொட்டுக்களுக்கு நன்றி செலுத்த வேண்டாமா?

இவை அனைத்தையும் எமக்கு வழங்கிய இறைவனுக்கு நாம் இத்தருணத்தில் நன்றி செலுத்த வேண்டாமா?

நீங்கள் புகைப்படத்தில் காணக்கூடிய சிறுமி இலங்கையின் பிரபல குழந்தை உளநலப்பிரிவு வைத்தியர் Dr.முஸ்தபா ரயீஸ் அவர்களின் லண்டன் ஹர்லி மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றுவருகிறார். அந்த குழந்தையின் தொப்புள் பகுதியில்சென்று ஒரு குழாய் முடிவடைவதை உங்களுக்கு பார்க்க முடிகிறதா?? பிறப்பிலேயே இந்தக்குழந்தை விழுங்க முடியாத அரிய தசை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டவர். இந்தக்குழந்தை ஓர் உணவை விழுங்கினால் அது வயிற்றுக்கு செல்வதற்குப்பதிலாக நுரையீரலை சென்றடைந்து நிமோனியா ஏற்பட்டு இறந்து விடுவார்.
இதை தவிர்க்க அவரது வயிற்றுக்கு ஒரு குழாய் இணைக்கப்பட்டு வாய் மூலம் உணவை செலுத்தாது குழாய் மூலம் அவருக்கு உணவு மற்றும் குடிபானங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக்குழந்தைக்கு தற்போது வயது 12. இதுவரை எந்தவித உணவினதும் சுவையை இந்தக்குழந்தைஅறிந்ததில்லை.
இங்கிலாந்து நாட்டுக்கே உரிய 1200 வகையான ஆப்பிள்கள் அங்குள்ளது. முழு உலகிலும் 7500 இற்கும் மேற்பட்ட அப்பிள் வகைகள் உள்ளன. அந்த 7500 இற்கும்மேற்பட்ட வகை ஆப்பிள்களும் 75000 வகையான வித்தியாசமான சுவைகளைக் கொண்டவை. எமது நாவில் உள்ள சுவை மொட்டுக்கள் இந்த 7500 இற்கும் மேற்பட்ட ஆப்பிள் கனிகளை ருசிபார்க்கும் வல்லமை கொண்டவை. இதேபோன்று தினமும் நாம்நூற்றுக்கணக்கானஅல்லது ஆயிரக்கணக்கான சுவை வகைகளை அனுபவிக்கிறோம்.ஆனால் இக்குழந்தைக்கோ வெவ்வேறு கட்டமைப்புக்களைக் கொண்ட உணவுகளையோ பல்வேறு சுவை கொண்ட குடிபானங்களையோ அனுபவிக்கும் பாக்கியம் இல்லை.
நாம் சுவைகளை அனுபவிக்க உதவும் அற்புதமான சுவைமொட்டுக்களுக்கு நன்றி செலுத்த வேண்டாமா?

இவை அனைத்தையும் எமக்கு வழங்கிய இறைவனுக்கு நாம் இத்தருணத்தில் நன்றி செலுத்த வேண்டாமா?

தமிழில் மொழிபெயர்ப்பு - அனஸ் அப்பாஸ்.

தகவல் - டாக்டர் முஸ்தபா ரயீஸ்.

கட்டாயம் முழுமையாக வாசித்தபின்நண்பர்களுக்கும்பகிரவும்! ! ! !

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top