அளுத்கம மற்றும் தர்காநகர் பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு
உங்களின் சேவகன் என்ற ரீதியில் நான் மன்னிப்பு கோருகின்றேன்.

-    அமைச்சர் ராஜித சேனாரத்ன

கண்ணாடிப் பாத்திரமொன்றை நான் செய்திருந்தேன். அந்த கண்ணாடி பாத்திரத்தை, சில குண்டர்கள் வந்து உடைத்து சேதப்படுத்தினார்கள். மீண்டும் முதலிருந்து நான் அதனை செய்ய வேண்டும்.


அளுத்கம மற்றும் தர்காநகர் பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் மன்னிப்புக் கோருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அளுத்கம தர்காநகர் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மையினால் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் பணிகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று களுத்துறையில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: உங்களுக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்கின்றோம். எமது இதயப் பூர்வமாக குரல் எழுப்புகின்றோம். அதிகளவான கவலை எனக்கே உள்ளது. ஏனெனில் இந்த தொகுதியை மிகவும் அழகாக நான் வைத்திருந்தேன். கண்ணாடிப் பாத்திரமொன்றை நான் செய்திருந்தேன். அந்த கண்ணாடி பாத்திரத்தை, சில குண்டர்கள் வந்து உடைத்து சேதப்படுத்தினார்கள். மீண்டும் முதலிருந்து நான் அதனை செய்ய வேண்டும். உங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் இந்த மாகாணத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியிலும், உங்களின் சேவகன் என்ற ரீதியிலும், நான் மன்னிப்பு கோருகின்றேன். என்று தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top