சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் குணமடைய பிரார்த்திப்போம்

(ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்)

இருதய நோய் காரணமாக தற்பொழுது கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் சிரேஷ்ட ஊடகவியலாளரும், அம்பாறை மாவட்டத்தில் மூத்த ஊடகவியலாளருமான கலாபூசணம் .எல்.எம். சலீம் குணமடைய றஹ்மத் நிறைந்த றமழான் மாதத்தில் பிரார்த்திப்போம்.
கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சலீம் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு  தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு மாற்றாப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இன்று தொலைபேசியினூடாக அவரை தொடர்பு கொண்டபோது தற்பொழுது ஓரளவு நலமடைந்து வருவதாகவும் இன்னும் ஐந்து தினங்களுக்கு கொழும்பில் தங்கியிருந்து வைத்திய ஆலோசனையின் பின்னர் நிந்தவூருக்கு வரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான அல்ஹாஜ் ரஊப் ஹக்கீம் மற்றும் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீட் உள்ளிட்டோர் தன்னை பார்வையிட வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எமது கல்முனை மாநகர சபை அமர்வின்போது கிரமமாக அங்கு வந்து செய்திகளை சேகரிக்கும் ஊடகவியலாளர்களின் சலீம் ள் சிறப்புமிக்கவராக திகழ்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது மூத்த ஊடகவியலாளரான கலாபூசணம் .எல்.எம்சலீம் விரைவில் குணமடைய கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சார்பிலும்அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் சார்பிலும் இறைவனை பிரார்த்திப்போமாக.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top