புனித ரமழான் தலைப் பிறையை 

தீர்மானிக்கும் மாநாடு


ஹிஜ்ரி 1435 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு, நாளை 28 ஆம் திகதி சனிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புனித ரமழான் நோன்பை தீர்மா னிக்கும் வகையில் அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.30 மணி தொடக்கம் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.

அவ்வாறு தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011-5234044, 2432110, 2390783 மற்றும் 0777 316415 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத் தருமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பொதுச் செயலாளர் கேட்டுக் கொள்கின்றார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top