காலாவதியான
மூலப்பொருட்களைப் பயன்படுத்தும்
நூடில்ஸ் தயாரிப்பு
நிலையம் சுற்றிவளைப்பு!
கொழும்பு,
சேதவத்தை பகுதியில்
உள்ள நூடில்ஸ்
தயாரிப்பு நிலையமொன்றை
நுகர்வோர் விவகார
அதிகார சபையினர்
சுற்றிவளைத்துள்ளனர். இதில்
இருந்து காலாவதியான
சுமார் 25,000 கிலோ நூடில்ஸ் பறிமுதல் செய்யப்பட்டதாக
கூட்டுறவு மற்றும்
உள்நாட்டு வர்த்தக
அமைச்சு தெரிவித்துள்ளது.
காலாவதியான
மா மற்றும்
மூலப்பொருட்களைப் பயன்படுத்தி நூடில்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இந்த
நூடில்ஸ், ஹோட்டல்கள்
மற்றும் உணவகங்களுக்கு
விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும்
கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும்
தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment