சமாதி வழிபாட்டில்
 மூழ்கிக் கிடக்கும் மூடர் கூட்டம்!

- முஹம்மட் ஜெலீல் நிந்தவூர்

சமூகத்தில் படர்ந்த கிடக்கும் அனாச்சார லீலைகள் பல. அவற்றுள் மிகக் கொடியது பாவகரமானது இஸ்லாத்தின் மூலக் கொள்கை ஏகத்துவத்தையே முறியடிக்கும் தன்மை கொண்டது சமாதி வணக்கம்.
இந்த நிலை ஓரளவு மாறுதல் அடைந்துவிட்டால் பிற சில்லறை அனாச்சார அனுஸ்டானங்களெல்லாம் நாளடைவில் தாமாகவே விடுதலை பெற்றுவிடும் அதற்கு போராட்டங்களும் கிளர்ச்சிகளும் தேவை இராது.
சில்லறை அனாச்சார செய்கைகளை கண்டிக்கவும், திருத்தவும் ஈடுபடுகிறோம். அவை வீண் வேலை! பலிபீடம் அங்கல்ல! தர்கா மணி மண்டபங்களுக்குள் இருக்கின்றது. அவைதான் தகர்க்கப்பட வேண்டும். அப்படித் தகர்த்துவிட்டால் ஏகத்தவத்தன்மைக்கு இழிவும் பாதகமும் ஏற்படாது. சமூகம் தாழ்ந்து கொண்டே போகாது.
மதகுருமார்களான மெளலவிகள் தான் என்பது நம்மிடம் நிலவி வரும் தவறான கருத்து. இம்முறையில் தொண்டு புரிபவன் தூற்றப்படுகிறான், மிரட்டப்படுகிறான். மார்க்கப் புலமையற்ற மடையா, இந்த பணி புரிந்திடலாமோடா? எனப் பரிகசிக்கப்படுகிறான், காரசாரமாக கண்டிக்கப்படுகிறான்!!
அனாச்சாரங்களை கண்டிக்கும் இலட்சியத்தோடு அறப்போர் புரிபவன் இஸ்லாத்தை கரைத்துக் குடித்தவனாக இருக்கவேண்டியதில்லை 5, 7, 10 ஆண்டுகள் என்று அரபி மதரஸாக்களில் கற்றுத் தேர்ந்து படாடோபங்களோடு காட்சி தரவேண்டியதில்லை.
கலைகள் பலவற்றில் சட்ட நுணுக்க வல்லுனர்களாக ஆராய்ந்தறிந்த சாஸ்திரியாக இருக்கத்தான் வேண்டுமென்ற விதியும் இல்லை. இஸ்லாம் அப்படி ஏதேனும் சட்டம் விதிக்கவில்லை. ஒவ்வொருவனுக்கும் மதப்பணியைக் கடமையாக்கி இருக்கிறது.
லாயிலாஹா இல்லல்லாஹூஇந்தக் கலிமா மந்திரத்தை ஓதி விட்டாலே போதுமே கல்லறை வணக்கம், ஆண்டவனுக்கு இணை வைக்கும் இழி செயல் இஸ்லாத்துக்கு ஆகாது. அது விலக்கப்படவேண்டும் என்ற கருத்தைப் பெற அதைச் செயலாக்கிக்காட்டும் துணிவைப் பெற. இதற்காக மார்க்க ஞானங்களை எல்லாம் துருவிப்பார்க்க வேண்டியதில்லை! அதன் மூலம் சன்னதுகள் தேவையில்லையே!

இந்நிலை மாறவேண்டும், மதப் பணிபுரிய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிமையிருக்கிறது என்ற உயரிய எண்ணங்கள் கொண்ட இதயங்கள் பெருகவேண்டும். அதற்கு எல்லோருக்கும் வாய்ப்பும் வசதியும் அளிக்கப்படவேண்டும். அதுவரை ஏமாற்றுவோர், ஏமாற்றப்படுவோர் இருந்தேதான் தீருவர். சமூகம் சீரழிந்து கொண்டேதான் போகும்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top