மீனவர்களின்பிரச்சினை
இன்று முக்கியபேச்சு
தமிழக மீனவர்கள் பிரச்சனை
மற்றும் கடலோர
மேலாண்மை திட்டம்
குறித்து மீனவப்
பிரதிநிதிகளுடன் தமிழக அரசு இன்று ஆலோசனை
நடத்துகிறது.. இரு நாட்டு மீனவர்களும் பங்கேற்ற
2-ம் கட்ட
பேச்சுவார்த்தைகளிலும் முன்னேற்றம் ஏற்படாததால்
பிரச்சனை நீடித்து
வருகிறது.
தமிழக
மீனவர்களை இலங்கை
கடற்படையினர் கைதுசெய்வது, தாக்குவது போன்ற சம்பவங்கள்
அதிகரித்து செல்வதால் அவற்றைத் தடுக்கும் முகமாக
இந்தச் சந்திப்பில்
முடிவுகள் எட்டப்படும்
என்று எதிர்பார்க்கப்படுவதாக
இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று இடம்பெறும் சந்திப்பில் தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் மீன்வளத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதில் 13 மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். கடலில் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து இன்று நடைபெறும் கூட்டத்தில் அரசிடம் முறையிடப்படும் என்று தெரிகிறது. கடலோர பகுதிகளில் மேற்கொள்ளபட வேண்டிய மேலாண்மை திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பிந்திய
செய்தி:
தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்படையினரால்
தொடர்ந்து கைது
செய்யப்பட்டு வரும் சம்பவத்தை அடுத்து, மீனவர்களின்
பிரதிநிதிகள் இன்று தமிழக அரசு அதிகாரிகளை
சந்தித்து பேசினர்.
சென்னை
தேனாம்பேட்டையில் உள்ள மீனவளத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற
இந்த கூட்டத்தில்
60 மீனவ பிரதிநிதிகள்
கலந்து கொண்டனர்
என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment