எமக்குள் முரண்பாடுகள் வருகின்றபோது
நாட்டாமை செய்தது இராணுவத்தினரும் பொலிசாருமே!
-
ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்
இறைநம்பிக்கையெல்லாம்
வெறும்பேச்சாக மாறிக் கொண்டு வருகின்றது. எமக்குள்
ஆயிரத்தெட்டுப் பிரிவுகளை கோடுகளாகக் கீறிக்கொண்டு கோடு
தாண்டி விளையாடுகிறார்கள்.
ஒருபுறம்
அந்நிய மதத்தவர்கள்
பள்ளிகளை உடைத்தெறியவும்
முஸ்லிம்களின் பொருளாதாரம் தொடக்கம் இந்த நாட்டில்
முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அனைத்து
சலுகைகளையும் இல்லாதொழிக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு அதற்காக
ஒரு வரைபினை
கையில் வைத்துக்கொண்டு
கழத்தில் இறங்கியிருக்கும்
இவ்வேளையில் இவர்களின் கூத்துவேறு.
இன்று
சாய்ந்தமருதில் இரு குழுக்கல் மோதல் அதாவது
SLTJ, ITJ இலங்கை தெளஹீத் ஜமாத், இந்திய தெளஹீத்
ஜமாத் என
இன்று மோதல்
இடம்பெற்று விஷேட அதிரடிப்படை வரவழைக்கப்பட்டு நிலைமை
கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தெரியவருகிறது.
பள்ளிகளில்
தராவிஹ் தொழுகைக்கு
இரண்டு சப்கள்
கூட நிரம்பாமல்
காணப்படுகின்றது. ஆகக்கூடிய தொகையாக ஐம்பது இருக்கும்
அதுக்குள்ளும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இபாதத்
செய்கின்றார்கள். இது ஒரளவுக்குப் பரவாயில்லை. சண்டைகள்
இல்லாமல் இபாதத்
செய்கிறார்கள்.
எத்தனை
பள்ளிவாசல்கள் கட்டுகின்றோம் என்பது எமக்கு தேவையில்லை.
ஒரு பள்ளியில்
எத்தனைபேர் தொழுகிறோம் என்பதுதான் தேவை. யார்
எவ்வாறு தொழுதாலும்
அதற்கான கூலியை
அல்லாஹ்தான் வழங்குவான்.
ஒன்றை
மட்டும் புரிந்து
கொள்ளுங்கள் இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை உடைப்பதற்கு
முன்மாதிரியாக இருந்தது முஸ்லிம்களே. முஸ்லிம்களுக்குள் முரண்பாடுகள் வருகின்றபோது நடுவில் நாட்டாமை
செய்தது இந்நாட்டு
இராணுவத்தினரும் பொலிசாரும் என்பதை நாம் மறந்து
விடக்கூடாது. இது இன்று இரவு சாய்ந்தமருதிலும்
இடம்பெற்றுவிட்டது.
எமக்குள்
அழுக்கை வைத்துக்
கொண்டு பிறர்மீது
குற்றம் சாட்டுவது
சிறப்பாக இல்லை.
முதலில் நாங்கள்
முன்மாதிரியாக வாழுவோம்.
பிரிவினைகள் வேண்டாம். ஒன்றுபடுவோம் உயர்வு பெறுவோம்!
0 comments:
Post a Comment