அஸ்மா ஜெஹாங்கீர் நியமனத்தால்

ஐ நா விசாரணையை பாகிஸ்தான் அடக்கி வாசிக்கும்?



.நா விசாரணைக்கான தீர்மானத்தில் கடுமையான எதிர்ப்பினை பலவழிகளிலும் பாகிஸ்தானே முன்னெடுத்திருந்தது இவ்வாறான சூழலில் பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் அஸ்மா ஜெஹாங்கீரை ஆலோசனை வழங்கும் வல்லுநர்களில் ஒருவராகச்  சேர்த்துள்ளதன்  மூலம் எதிர்காலத்தில் பாகிஸ்தானும் அடக்கி வாசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளவரும், ஃபின்லாந்து அரசின் முன்னாள் அதிபருமான மார்ட்டி அத்திசாரி,

நியூசிலாந்தின் முன்னாள் கவர்னர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட் ஆகியோரே ஏனைய ஆலோசனை வழங்கும் வல்லுநர்களாக ஐ.நாவினால் அறிவிக்கப்பட்டுள்ளவர்களாகும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top