தேசிய விளையாட்டு விழாவின் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் 

கிழக்கு மாகாண அணி சம்பியானாக தெரிவு

(..ஹஸ்ஸான் அஹமத்)

தேசிய விளையாட்டு விழாவின் ஒரு அங்கமான மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாண அணி சப்ரகமுவமாகாணத்துடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சம்பியானாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிப் போட்டி நடைபெற்றது
.முதலில் துடப்பெடுத்தாடிய சப்ரகமுவ அணி 10 ஒவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 31 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர். இதனால் 8 விக்கட்டுக்களினால் கிழக்கு மாகாண அணி வெற்றி பெற்றது.
கிழக்கு மாகாண அணி சார்பாக அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணி பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். அட்டாளைச்சேனைப் பிரதேசம் தேசிய விளையாட்டு விழாவில் பல தடவைகள் பல போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கிழக்கு மாகாண அணியில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வீரர் நிக்ஸி அஹமட், அக்ரம் ஆசிரியர், ஆரிப் ஆசிரியர் போன்றவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இவ் அணியை பயிற்றுவித்து அழைத்துச்சென்ற அட்டாளைச்சேனை விளையாட்டு உத்தியோகத்தர் எச்.எல். தாஜீதீன் என்பது குறிப்பிடதக்கது.
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தினை சுவிகரிக்க கிழக்கு மாகாண அணிக்கும், பயிற்றுவித்த அட்டாளைச்சேனை விளையாட்டு உத்தியோகத்தர் எச்.எல். தாஜீதீன்க்கும் சுப்பர்சொனிக் விளையாட்டுக்கழகம், ஸம்ஸம் இளைஞர் கழகம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top