சென்னை போரூர் அருகே 11 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து:
பலி என்ணிக்கை 8 ஆக உயர்வு
சென்னை போரூர் அருகே 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் பெண் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் 40 முதல் 50 பேர் வரைசிக்கியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
முன்னதாக, போரூர்–குன்றத்தூர் சாலையில் இருந்து 100 அடி தொலைவில் அருகருகே இந்த இரு கட்டிடங்களும் கட்டப்பட்டு வந்தன. இரு கட்டிட பணிகளும் கிட்டத்தட்ட கட்டி முடிக்கப்பட்டு உள்புற வேலைகள் நடைபெற்று வந்தன.
இந்த இரு கட்டிடங்களின் கட்டுமான பணியில் சென்னை, சேலம் மற்றும் ஆந்திரா, ஒடிசா, பீகார் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 200 பேர் ஈடுபட்டு வந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த இரு கட்டிடங்களின் அடித்தளத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை 4 மணி அளவில் சென்னை புறநகர் பகுதிகளில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. போரூர் பகுதியில் பலத்த காற்றுடனும், இடி–மின்னலுடனும் மழை கொட்டியது.அப்போது, திடீரென்று பயங்கர சத்தத்துடன் விழுந்து தரைமட்டம் ஆனது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 12–க்கும் மேற்பட்ட வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளில் 60 பேர் வரை சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. அவர்களை பத்திரமாக மீட்க மீட்புக்குழுவினர் போராடி வருகிறார்கள்.
பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணி இரவு விடிய விடிய நடைபெற்றது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீட்புப்பணிகள் முடிந்த பின்னர்தான் எத்தனை பேர் பலி ஆனார்கள் என்ற முழுவிவரம் தெரியவரும் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment