மதமாற்றத்துக்காக
மரண தண்டனை விதிக்கப்பட்ட
பெண் விடுதலை
சூடானில்
மதமாற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணுக்கு
சிறையில் குழந்தை
பிறந்ததால், அந்த நாட்டு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து,
அந்த நாட்டின்
அரசு செய்தி
நிறுவனமான சுனாவில்
வெளியான செய்தியில்,
""மதமாற்ற தடை சட்டத்தின்
கீழ் சிறையில்
அடைக்கப்பட்டுள்ள மரியம் யாஹியா இப்ராஹிம் இசாக்கிற்கு
முன்பு வழங்கப்பட்ட
மரண தண்டனையை
உச்சநீதிமன்றம் ரத்து செய்து, அவரை சிறையில்
இருந்து விடுவிக்குமாறு
தீர்ப்பு வழங்கியுள்ளது''
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே,
மரியத்தின் வழக்குரைஞர் மொஹானந்த் முஸ்தபா கூறுகையில்,
""சிறையில் இருந்து மரியம்
திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டார்'' என்றார்.
முஸ்லிம்
தந்தைக்கும், எதியோப்பியாவைச் சேர்ந்த கிறிஸ்துவ தாய்க்கும்
பிறந்தவர் மரியம்
யாஹியா இப்ராஹிம்
இசாக் (26).
இவர்
கிறிஸ்துவ மதத்திற்கு
மாறியதால், சூடான் நாட்டின் 1983ஆம் ஆண்டின்
இஸ்லாமிய ஷரியத்
சட்டத்தின் கீழ் (இச்சட்டத்தின்படி மதம் மாறுபவர்களுக்கு
மரண தண்டனை
விதிக்கப்படும்) கடந்த மே 15ஆம் திகதி
இவருக்கு மரண
தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில்,
இவரை சிறையில்
இருந்து விடுவிக்குமாறு
அமெரிக்கா, பிரிட்டன் உள்பட மேற்கத்திய நாடுகள்
ஆதரவுக் குரல்
கொடுத்து வந்தன.
சேஞ்ச்
டாட் ஆரிஜன்
என்ற இணையதளத்தில்
10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அவரை
விடுவிக்குமாறு ஆதரவு தெரிவித்தும் இருந்தனர்.
இதனிடையே,
20 மாதங்களே ஆன தன்னுடைய ஆண் மகனுடன்
சிறையில் அடைக்கப்பட்டிருந்த
மரியம் யாஹியாவுக்கு
குழந்தை பிறந்தததையடுத்து,
அவரை விடுவிக்குமாறு
கார்டோமில் உள்ள உச்சநீதிமன்றத்தில் அவரது வழக்குரைஞர்
மனு தாக்கல்
செய்திருந்தார்.
0 comments:
Post a Comment