கொல்லப்பட்ட இரு முஸ்லிம் வாலிபர்களின் உடல்களையும்

மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை நடாத்த நடவடிக்கை!

அளுத்கம பேருவளை போன்ற பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட வன்முறை காரணமாக கொல்லப்பட்ட இரு முஸ்லிம் வாலிபர்களின் மரண விசாரனை அறிக்கைகளின் மீது சந்தேகம் நிலவுவதால் குறித்தஇரு முஸ்லிம் வாலிபர்களின் உடல்களையும் மீண்டும் தோண்டி எடுத்து மரணத்துக்கான காரணத்தை கண்டறிய மரண விசாரணை மீண்டும் நடாத்தப் படவேண்டும் என கோரி இலங்கை சட்டத் தரணிகள் சங்கம் The Bar Association of Sri Lanka (BASL) நீதி மன்றத்தை கோரவுள்ளது .
வல்பிட்டிய மஸ்ஜித் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மஸ்ஜித் மீதான தாக்குதலில் இருந்து மஸ்ஜித்தை பாதுகாக்கும் நோக்குடன் போராடியவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயம் அடைந்த அதேவேளை இ ந்தஇளைஞர்கள் இருவரும் ஷஹீதாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர் என மரண விசாரணை அறிக்கை வழங்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானதாக பிரதேச மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது . வன்முறை தாக்குதல்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகளும் ஏனைய அரச அதிகாரிகளும் துணை நின்றதாக குற்றசாட்டுக்கள் முன்வைக்கப் பட்டுவருகின்ற நிலையில் இலங்கை சட்டத் தரணிகள் சங்கம் இந்த கோரிக்கையை நீதிமன்றத்தில் முன்வைக்கவுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார் .இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கூட்டத்தில் பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்துமாறும் பொதுபல சேனா இயக்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டு;க்கள் குறித்து அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
பொதுபல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டம் ஒழுங்கை பாதுகாப்போர் உரிய நடவடிக்கை எடுக்காமை கண்டிக்கப்பட வேண்டியது சட்டத் தரணிகள் சங்கம் பொதுபல சேனா இயக்கம் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளது.

அதேவேளை தாக்குதலினால் பாதிக்கப்பட்ட அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top