பொதுபல சேனாவினால் கண்டி பிரகடனத்தில்
முஸ்லிம்களின் சனப் பெருக்கம் தொடர்பில்..

பொதுபல சேனாவினால் கண்டியில் வெளியிடப்பட்ட பத்து அம்சங்கள் கொண்ட கொள்கைப் பிரகடனத்தில் இலங்கை பௌத்த இளைஞர், யுவதிகளின் எண்ணிக்கை குறைவு. ஆனால் முஸ்லிம்களுக்கு இதில் எதுவித கட்டுப்பாடுகளும் இல்லை. புத்தபெருமானுக்கு அதனைச் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தனர்.
கண்டி ஸ்ரீதலதா மாளிகையின் 'மங்குல் மடுவ" யில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அதிர்ஷ்டான பூஜையின் போதே இந்த பிரகடனம் வெளியிடப்பட்டது. பொதுபல சேனாவின் செயலாளர் கலபொட அத்தேஞானசார தேரர் அதனை வாசிக்க ஏனைய அங்கத்தவர்களும் அது தொடர்பாக திடசங்கற்பம் பூணுவதாக கைகளில் தீபங்களை ஏந்திய வாறு மீள் உரைத்தனர். அதன் சாரம்சம் பின்வருமாறு-
மதவாதிகளினதும், அடிப்படைவாதிகளினதும் சர்வதேசப் பயங்கரவாதிகளினதும் பொருளாதார சுரண்டல் வாதிகளினதும் கேந்திர நிலையமாக படிப்படியாக இலங்கை மாற்றம் பெறுகிறது. எனவே நாம் தாய் நாட்டைக் காப்பதற்கும் புத்த சாசனத்தைக் காப்பதற்கும் நாம் உறுதி பூணுகிறோம்.
அடுத்ததாக, கடந்த காலங்களில் தமிழ் பிரிவினைவாதிகளது நடவடிக்கை காரணமாக பல்வே பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்து வெற்றி கண்டது போன்று அண்மைய காலங்களில் ஏற்பட்ட முஸ்லிம் அடிப்படைவாத பயமுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்தது போல் எதிர்காலத்திலும் சகல பயமுறுத்தல்களையும் வெற்றி கொள்ளப் பாடுபடுவோம் .
இலங்கை பௌத்த மக்களைப் பற்றி சர்வதேச ரீதியாக தவாறான கருத்துகளைப் பரப்புகின்ற ஊடகங்கள் பிரதானிகள், ராஜதந்திரிகள் பிரபலங்கள் போன்றவர்களுக்கு நல்ல தெளிவும் உண்மையும் ஏற்பட வேண்டும் எனவும் பிராத்தித்தனர்.

(நன்றி மெட்ரோ நியுஸ் 27-04-2014)

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top