ஒல்லாந்தர் விரட்டியபோது செனரத் மன்னன் உதவாமல் இருந்திருந்தால் இன்று கிழக்கு

முதலமைச்சர் பதவி முஸ்லிம்களுக்குக் கிடைத்திருக்காது

அமைச்சர் பஸீர் சேகுதாவூத்



முஸ்லிம்களுக்கு முஸ்லிம்கள் ஒல்லாந்தர்களினால் விரட்டப்பட்ட சமயம் செனரத் மன்னன் எமக்கு புகழிடம் அளித்தான். அன்று அந்த நிலைமை தோன்றா விட்டால் இன்று இந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் இருந்திருந்த முடியுமா? அன்று சிங்களவர்களுடன் இணைந்து அவர்களையும் அரவணைத்து சென்றமையினால் நாம் எமக்கான தேவையை பெற்றுக் கொள்ள முடிந்தது என உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவுத் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை வை.எம்.எம்.. அமைப்பின் தேசிய மாநாட்டு மடவளை பஸார் மதீனா தேசிய கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம்களின் 1100 வருட வரலாற்றை எடுத்து பார்த்தால் சமூகம் எவ்வாறு அரசியல் நகர்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது புலனாகும்.
இன்று முஸ்லிம்கள் நாட்டுக்காக என்ன செய்தார்கள் என்று சில பேரினவாதிகள் கேள்வியெழுப்புகின்றனர். மேலும் ஊடகங்கள் மூலமாக குறிப்பாக சமூகவலைத்தளங்களின் மூலமாக இல்லாத பொல்லாத விடயங்களை உள்வாங்கி முஸ்லிம்களுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கும் நாம் ஆற்றல் மிகுந்த ஆரோக்கியமான சிந்தனை ரீதியான பதில்களை அளிக்க வேண்டும். ஆகவே எமது வரலாற்று தளர்வுகளையும் தடங்களையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
முஸ்லிம் சமூகம் உணர்ச்சி பூர்வமாக தொழிற்படும் தலைமைத்துவமல்லாது சிந்தனைப் பூர்வமாக செயற்படக் கூடிய தலைமைத்துவமுடையவர்களாக தமது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் இதுவே காலத்தின் கட்டாயத் தேவைப்பாடுமாகும்.
முஸ்லிம் சமூகம் தனித்து நின்று செயற்படுவதனால் ஒரு போதும் உரிய தீர்வுகளை அடைய முடியாது. அவ்வாறு அடைந்ததற்கான வரலாறும் கிடையாது.
அந்தவகையில் எமது கடந்த வரலாற்றை நாம் கருத்தில் எடுத்து சமூகத்தின் விடியலை எதிர் நோக்கி செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

நன்றி: மீள்பார்வை

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top