பாகிஸ்தான் விமான நிலையத்தில்
மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு
பெண் பயணி பலி
பாகிஸ்தானில்
பெஷாவர் விமான
நிலையத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர்கள் சுட்டதில்
பெண் பயணி
ஒருவர் உயிரிழந்ததோடு
3 பேர் படுகாயம்
அடைந்துள்ளனர். செவ்வாய்கிழமை நள்ளிரவில்
178 பயணிகளுடன் சவுதி அரேபியாவில் இருந்து
பயணிகளோடு வந்த பயணிகள் விமானம் பெஷாவர்
சர்வதேச விமான
நிலையத்தில் தரை இறங்கியது. விமானம் ஓடுதளத்தில்
வந்து நிற்கும்
நேரத்தில் திடீரென
அதனை நோக்கி
மர்ம நபர்கள்
சரமாரியாக துப்பாக்கிச்
சூடு நடத்தினர்
எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில்
அந்த விமானத்தில்
பயணித்த பெண்
ஒருவர் தலையில்
குண்டு பாய்ந்து
சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தார். மூன்று பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
விமானம் மீது
6 குண்டுகள் வரை பாய்ந்ததாகவும் பாதுகாப்பு படை
தெரிவித்துள்ளனர். எனினும் பயங்கர
விபத்தில் இருந்து
விமானம் தப்பியதாக
அதிகாரிகள் மேலும் தெரிவித்திருக்கின்றனர். பெரும் பரபரப்பை
ஏற்படுத்திய இச்சம்பவம் விமானத்தை குறிவைத்து அரங்கேற்றி
இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாக
வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.