ஈராக் நிலவரம்:

தீவிரவாதிகளின் பிடியில் விமான நிலையம்
பாக்தாதில் அமெரிக்க அமைச்சர்

ஈராக்கில் நடைபெற்றுவரும் போர் குறித்து அமெரிக்க  வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி நேரில் ஆய்வு செய்தார்இந்நிலையில் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தல் அஃபார்  பகுதியையும், விமான நிலையத்தையும் கைப்பற்றியது என செய்திகள் தெரிவிக்கின்றன.
 .எஸ்..எஸ்தீவிரவாத அமைப்பு. கடந்த 9 ஆம் திகதி ஆரம்பித்த தீவிரவாத  தாக்குதலில் இதுவரை நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள்  உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது. ஈராக்கில் இராணுவத்துக்கு எதிராக  சன்னி முஸ்லிம் பிரிவினர், .எஸ்..எஸ். தீவிரவாத அமைப்புடன்  இணைந்து கடும் சண்டையிட்டு வருகின்றனர். நாட்டின் வடக்குப்  பகுதியில் பல்வேறு நகரங்களை கைப்பற்றிய தீவிரவாதிகள், கிழக்கு  பகுதியிலும் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.  
 ஈராக்-சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளையும் அவர்கள் கைப்பற்றி  வருகின்றனர். ஏற்கனவே சிரியாவில் பல பகுதிகளை தங்கள்  கட்டுப்பாட்டில் வைத்துள்ள தீவிரவாத அமைப்பு, ஈராக்-சிரியாவில் புதிய  இஸ்லாமிய நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையில் ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள தல் அஃபார்  பகுதியையும், அங்குள்ள விமான நிலையத்தையும் தீவிரவாதிகள் நேற்று  முழுமையாக கைப்பற்றினர். இந்த பகுதியில் அதிக அளவில் ஷியா  முஸ்லிம் பிரிவினர் வசித்து வருகின்றனர். இராணுவ அதிகாரி பேட்டி:“தல்  அஃபார் பகுதியில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. நாங்கள்  அங்கிருந்து வெளியேறுவது தோல்வியாகாது. இதுவரை நடைபெற்ற  சண்டையில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்“  என்று பிரதமர் நூரி அல் மாலிகியின் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர்  லெப்டினென்ட் ஜெனரல் குவாசெம் அட்டா தெரிவித்துள்ளார்முதல்முறையாக தங்கள் தரப்பில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து அரசு  தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜோர்தான் நாட்டில் பயணம் மேற்கொண்ட  அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, நேற்று பாக்தாத் சென்றடைந்தார்அவருடைய பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பிரதமர்  மாலிகியை சந்தித்த அவர், ஈராக்கின் பல்வேறு அரசியல்  தலைவர்களையும் சந்தித்தார். “ஈராக்கில் அரசியல் தீர்வு காணுவது  குறித்து கெர்ரி ஆலோசனை நடத்துவார். கடந்த ஏப்ரலில் தேர்தல்  நடைபெற்றாலும் புதிய அரசு அமையவில்லை. அந்த புதிய அரசில்  அனைத்துப் பிரிவினருக்கும் சரியான பிரதிநிதித்துவம் கிடைக்கும்  வகையில் அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்  என்பதை வலியுறுத்துவார்என்று அமெரிக்க வெளியுறவு செய்தித்  தொடர் பாளர் ஜென் பிசாகி முன்னதாக தெரிவித்திருக்கிறார்.

ஈராக்கில் முறையான அரசு அமைய உதவும்படி அனைத்து அரபு  நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. தீவிரவாதிகள்  திட்டமிட்டுள்ள புதிய இஸ்லாமிய நாடு உருவானால், அது இந்த  மண்டலத்தின் பாதுகாப்புக்கு எப்போதுமே பாதகமாகவே இருக்கும் என்று  அமெரிக்கா கூறி வருகிறது. அனைத்து மக்களுக்கும் பிரதிநிதித்துவம்  கொண்ட அரசை அமைக்க வேண்டும். அல்லது மாலிகி பிரதமர்  பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அமெரிக்கா கூறிவருகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top