ஈராக்
வான் வெளியில் வட்டமிடும்
அமெரிக்க ஆளில்லா
விமானகள்
ஈராக்
வான்வெளியில் அமெரிக்க விமானம் பறந்து வருவதையடுத்து
அங்கு உள்நாட்டு
போரில் ஈடுப்பட்டுள்ள
தீவிரவாதிகள் மீது எந்த நேரத்திலும் வான்வெளி
தாக்குதல் நடத்தப்படலாம்
எனவெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈராக்
விவகாரத்தில் நேரடியாக தலையிட மாட்டோம் என்று
அமெரிக்கா கூறிவந்த
நிலையில், தற்போது
அமெரிக்க வீரர்கள்
180 பேர் ஈராக்
வந்து சேர்ந்துள்ளனர்
எனவும் அறிவிக்கப்படுகின்றது.
ஈராக்
வான்வெளியில் ஆளில்லாத மற்றும் ஆட்களுடன் விமானங்களை
அமெரிக்கா பறக்கவிட்டுள்ளது.
ஈராக்கில் உள்ள
அமெரிக்கா இராணுவ
வீரர்கள் மற்றும்
மக்களை பாதுகாக்க
இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவ
தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது.
சன்னி
மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்
மீது இந்த
விமானங்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபடாது என்று
பென்டகன் தெரிவித்துள்ளதாகவும்
அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment