முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளால்
இலங்கைக்கு அந்நிய செலாவணி இழப்பு!
பொருளாதாரத்தில்
பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று
ஆய்வாளர்கள்
கருத்து!!
முஸ்லிம்களுக்கு
எதிரான ஹலால் பிரச்சினை அளுத்கமவில் பாரிய இனக்கலவரம் போன்றவற்றால் தற்போது அவுஸ்திரேலியா
ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் முற்றாக இலங்கையை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு
வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்திச் சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட அமைதியான
சூழலின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
அதிகரித்தது. இதன் காரணமாக இலங்கைக்கு
அதிகளவில் அந்நியச் செலாவணி கிடைத்தது. இந்த
நிலையில் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரச அடக்கு முறை தொடர்வது பற்றிய கண்டனங்கள் காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அவப் பெயர் ஏற்பட்டது.
அன்று தொடக்கம் சுற்றுலாத்துறை வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கியது.
இவ்வாறான நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான ஹலால் பிரச்சினையை அடுத்து முஸ்லிம்
நாடுகளின் சுற்றுலாப் பயணிகளும் இலங்கை வருவதை
தவிர்க்கத் தொடங்கினர். எனினும் நிலைமையை
புரிந்து கொள்ளாத அரசாங்கம் பொது பல சேனாவினரை கட்டுப்படுத்த தவறியது. இதன் காரணமாக
அண்மையில் அளுத்கமவில் பாரிய இனக்கலவரம் வெடித்தது. இதனையடுத்து தற்போது அவுஸ்திரேலியா ஐரோப்பிய நாடுகளின்
சுற்றுலாப்பயணிகள் முற்றாக இலங்கையை புறக்கணிக்கும்
நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள
அந்நிய செலாவணி இழப்பு இலங்கைப் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment