அளுத்கம, பேருவலை இனவாத தாக்குதல்கள்

- SLTJ யின் இரண்டாம் கட்ட நிவாரணப் பணி

Thowheed Dawah

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களின் உச்சகட்டமாக கடந்த 15ம் திகதி அளுத்கம, பேருவலை, தர்கா நகர் உள்ளிட்ட பகுதி வாழ் முஸ்லிம்கள் மீது பொது பல சேனாவின் தூண்டுதலில் பயங்கர இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதல் காரணமாக 08 சகோதரர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 02 பேர் மரணித்ததுடன்  90க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். சுமார் 1500 கோடிக்கு மேற்பட்ட சொத்துக்கள் சூரையாடப்பட்டு, 300க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரண சேகரிப்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் இறங்கியது. முதல் கட்டமாக உலர் உணவுப் பொருட்களை விநியோகம் செய்த ஜமாத். தனது இரண்டாம் கட்ட நிவாரணப் பணியில் கடந்த செவ்வாய்க்கிழமை (24.06.2014) ஈடுபட்டது.
இரண்டாம் கட்ட நிவாரணப் பணியில்
# துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்த 02 சகோதரர்களின் 05 பிள்ளைகளுக்குமான கல்வி உதவியாக மாதாந்தம் ஒரு பிள்ளைக்கு தலா 2500 வீதம் ஜமாத் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தது.
# துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 08 சகோதரர்களுக்கும் ஒருவருக்கு தலா 50000 (ஐம்பதாயிரம்) ரூபா வீதம் உதவித் தொகை வழங்கப்பட்டது.
# சுமார் 500 குடும்பங்களுக்கு 3000 (மூவாயிரம்) ரூபா பெறுமதியான நோன்புக்குரிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
# சுமார் 300 குடும்பங்களுக்கு நோன்புக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்களுடன் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான உதவித் தொகை 5000 (ஐந்தாயிரம்) ரூபா பணமும் வழங்கப்பட்டது.
இலங்கை முஸ்லிம்கள் மற்றும் வெளிநாடு வாழ் இலங்கை முஸ்லிம் சகோதரர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்தின் மூலம் இவ்வுதவி செய்யப்பட்டது.
இனவாதத்தினால் பாதிக்கப்பட்ட அளுத்கம பகுதி மக்களுக்கான ஜமாத்தின் பணிகள் மேலும் தொடர வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்பதுடன், அந்த சகோதரர்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் ஜமாத்தை தொடர்பு கொண்டு தமது உதவிகளை வழங்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உங்கள் ஸகாத் மற்றும் ஸதகா உதவிகளை பணமாக வைப்பிலிடவேண்டிய வங்கிக் கணக்கு

Sri Lanka Thawheed Jamath
Hatton National Bank
Maradana Branch
Acc.No: 108010104971






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top