பிரதமர் உறங்குவதாக செய்தி ஒளிபரப்பிய 

தொலைக்காட்சி சேவைக்கு தடை!

உகாண்டா பிரதமராக இருப்பவர் யோவேரி முசெவெனி. இவர் பாராளுமன்றத்தில் தூங்குவது போல ஒரு காட்சியை  தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது. இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த  தொலைக் காட்சி சேவைக்கு அரசு தடை விதித்து விட்டது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

.இச் சம்பவம் குறித்து அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, பிரதமர் சில நேரங்களில் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வது வழக்கம். இவ்வாறு அவர் ஆழ்ந்து தியானம் செய்வதை படம் பிடித்த தொலைக்காட்சி நிறுவனம் பாராளுமன்றத்தில் பிரதமர் உறங்குகிறார் என்று செய்தி ஒளிபரப்பியது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதனால் அந்த தொலைக்காட்சி சேவைக்கு தடை விதிக்கப்பட்டது என பிரதமரின் உறக்கத்திற்கு காரணம் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top