முஸ்லிம்களின் பாதுகாப்பு
தொடர்பில்
சரியான பொறிமுறை
ஒன்று அவசியம்
முஸ்லிம்களின் தகுதியானதும் தைரியமானதுமான
ஹக்கீமின் தலைமையின் கீழ்
ஒன்றுபட அழைக்கின்றேன்.
-பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்
பொதுபல
சேனா மற்றும்
ராவண பலய
போன்ற தீவிரவாத
அமைப்புக்களின் கொடூர பிடியில் சிக்கியுள்ள முஸ்லிம்
சமூகத்தை காப்பது
என்றால் முஸ்லிம்களின்
தகுதியானதும், தைரியமானதுமான ஹக்கீமின் தலைமையின்; கீழ்
ஒன்றுமைப்பட வேண்டும், பத்திரிகைகளுக்கு
எங்களுடைய வாயை
பொத்தச் சொன்னார்கள்,
கதிரைகளை தூக்கினார்கள்
என்று சொல்லும்
தலைமைகளாக இருக்காமல்
முஸ்லிம் சமூகம்
சார்ந்த பிரச்சினைகளை
உள்நாட்டிலும் வெளிநாட்டுக்கும் கொண்டு சென்று
தகுந்த தீர்வை
பெற்றுத்தரக் கூடிய ஹக்கீமின் தலைமையாக அது
இருக்கவேண்டும் இவ்வாறு திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
மெஸ்றோ நிறுவனத்தின் ஏற்பாட்டில
அளுத்கம, தர்ஹா
நகர், பேருவளை
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்,
ஸஹீதானவர்களுக்கும் துஆப் பிரார்த்தனை
மற்றும் முஸ்லிம்
இருப்பும் அச்சுறுத்தும்
தீவிரவாதமும் எதிர்கொள்ளும் உபாயங்களும் எனும் தொனிப்பொருளில்
மக்களை விழிப்பூட்டும்
நிகழ்வு; கடந்த
27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு
மண்டபத்தில் நடைபெற்றது.
மெஸ்றோ நிறுவனத்தின் பிரதித்
தலைவர் சட்டத்தரணி
ஏ.எம்
நசீல் தலைமையில்
இடம்பெற்ற நிகழ்வில்
விஷேட அதிதியாக
கலந்து கொண்டு
உரையாற்றும் போதே ஹரீஸ் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு ஹரீஸ் எம்.பி.
தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,
அளுத்கம,
தர்ஹா நகர்,
பேருவளை மற்றும்
பெலிப்பன்னை பிரதேசங்களில் பொதுபல சேனா மற்றும்
இனவாதிகளால் அப்பாவி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவெறித்தாக்குதலைக்
கண்டித்தும் ஈவிரக்கமற்றவர்களால் கொல்லப்பட்டும்,
சொத்துக்கள் சேதமாக்கப்பட்டும் துன்பகரமான
நிலையில் இருக்கும்
குறித்த பிரதேச
மக்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்க பிரார்த்தனை
செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வையும்
சில தினங்களுக்கு
முன்னர் ஏற்பாடு
செய்யப்பட்ட இது போன்ற நிகழ்வுகளையும் நிறுத்துவதற்கு
கல்முனை பொலிஸார்
பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டனர்.
இன்றைய நிகழ்வினை கல்முனை
பொலிஸார் தடைசெய்ய
நீதிமன்றிக்கு சென்று தடை உத்தரவுபெற வழக்கு
தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கினை சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா
உள்ளிட்ட சட்டத்தரணிகள்
குழுவினரின் வாதத்திறமையால் பொலிஸாரின் தடை உத்தரவு
கோரிக்கை மனு
நிராகரிக்கப்பட்டு இன்றைய நிகழ்வினை
நடாத்துவதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கியது.
கடந்த இரு தினங்களுக்கு
முன்னர் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த இவ்வாறான நிகழ்வை
மக்கள் வீதியில்
கூடுவதால் சட்டம்
ஒழுங்கு பாதிக்கும்
என்ற அடிப்படையில்
நீதிமன்ற உத்தரவு
ஒன்றின் ஊடாக
கல்முனை பொலிசார்
தடுத்தன் ஊடாக
சிறுபான்மையினருக்கு ஜனநாயக ரீதியான
நடைமுறைகளுக்கு கூட தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
தற்போது
முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்டுள்ள
இவ்வாறான தாக்குதல்கள்
திட்டமிடப்பட்ட அடிப்படையில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும்
இவ்வாறான செயல்கள்
இடம்பெறக்கூடிய சாத்தியம் சம்பந்தமாக கடந்த இரண்டு
வருடங்களுக்கு முன்னர் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மூடிய
அறையில் ஜம்மியத்துல்
உலமாவின்
ஏற்பாட்டில், 18 முஸ்லிம் பாராளுமன்ற
உறுப்பினர்களையும் அழைத்து பேசியபோது
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட திட்டமிடப்படும் தாக்குதல்கள்
தொடர்பாக தெளிவு
படுத்தப்படுத்தியதாகவும் அது போன்று
பல்வேறு இடங்களில்
பல்வேறு சந்தர்ப்பங்களில்
இவ்வாறான கொடூரத்தாக்குதல்கள்
தொடர்பில் சிவில்
அமைப்புக்களினால் எச்சரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
முஸ்லிம்
சமுகத்தில் இருக்கின்ற பாரிய குறைபாடு பிரச்சினைகள்
வந்தால் மட்டும்
கூடுவது பின்னர்
விட்டுவிடுவது என்பதுதான், இவ்வாறு விட்டுவிட்டதன் பலனையே
தற்போது
அளுத்கம, தர்ஹாநகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை
பிரதேசங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் முஸ்லிம் சமூகம்
அனுபவிக்கின்றது. அளுத்கம, தர்ஹாநகர், பேருவளை பிரதேசங்கள்
தீவிரவாதிகளின் தாக்குதல்குக்கு உட்பட்டுக்கொண்டிருக்கும்
போது குறித்த
தாக்குதலை நிறுத்துவதற்கு
தாங்கள் பல்வேறுபட்ட
முயற்சிகளை மேற்கொண்ட போதும் உடனடியாக சாத்தியப்படாமல்
போனது.
முஸ்லிம்களின்
பாதுகாப்பு தொடர்பில் சரியான பொறிமுறை ஒன்று
இல்லாததன் காரணமாகவே
முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதாகவும் உடனடியாக
இங்கு வாழும்
சிறுபான்மையினரின் பாதுகாப்பு தொடர்பில்
அரசு காத்திரமான
நடவடிக்கைகளை இன்றுவரை எடுக்கவில்லை என்றும் இவ்விடயத்தில்
அரசு விரைந்து
நடவடிக்கை எடுக்க
வேண்டும்.அளுத்கம,
தர்ஹாநகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில்
பொதுபல சேனா
மற்றும் சிங்கள
தீவிரவாதிகளால் அப்பாவி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட
தாக்குதல்களையும் கொள்ளையடிப்புக்களையும் அரச
பாதுகாப்பு படையினர் கைகட்டி பார்த்துக்கொண்டிருந்தனர். அரசு சிறுபான்மை
முஸ்லிம் மக்களை
பாதுகாக்க தவறியதன்
காரணமாகவே முஸ்லிம்
காங்கிரஸின் தலைமை குறித்த விடயத்துக்கு உள்நாட்டில்
மட்டும் தீர்வை
பெற்றுவிட முடியாது
எஞ்சி இருக்கின்ற
பிரதேசங்களையாவது பாதுகாப்பதென்றால் அரசுக்கு
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலிருந்தும் அழுத்தங்களை
பிரயோகிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதன் விளைவாக
அரபு உலக
நாடுகள் மற்றும்
ஐரோப்பிய நாடுகளுக்கு
இப்பிரச்சினையினை தலைவர் ஹக்கீம் மிக விரைவாக
கொண்டு சென்றார்.
இதன் விளைவாக
நாட்டின் தலைமை
ஜனாதிபதிக்கு சர்வதேச அழுத்தம் இவ்விடயத்தில் பெரும்
தலையிடியினை கொடுத்தது. இதனால் கொதிப்படைந்த சிங்கள
பேரினவாத அமைப்புக்கள்
தலைவர் ஹக்கீமை
நீதி அமைச்சர்
பதவியிலிருந்து விலகுமாறு போர்க்கொடி தூக்கியதை நாம்
அறிவோம்.
தெற்கில்
இருக்கின்ற சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களுடன் ஐக்கியமாகவே
இருந்து வருகின்றனர்.
பொதுபலசேனா போன்ற குறுகிய எண்ணம்கொண்ட தீவிரவாத
அடக்கியாளும் எண்ணம் கொண்ட சிலராலேயே இவ்வாறான
காட்டுமிராண்டித்தனமான செயல்கள் நடத்தப்படுகின்றன.
தற்போது நாட்டில்
ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு காரணம் பொதுபல சேனா
மற்றும் ராவண
பலய போன்ற
அமைப்புகள் முன்னெடுத்துள்ள தீவிர நடவடிக்கியானது இங்கு
இறுக்கமான அடக்கியாளும்
நோக்கம் கொண்ட
அரசு ஒன்றை
நிறுவவேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் உணர்ச்சியூட்டும்
பேச்சுக்களை பேசி மக்களை பிழையாக நடத்த
முற்படுகின்றனர். இந்நிலை நாட்டுக்கு ஆரோக்கியமானதாக அமையாது
என்றும் எச்சரிக்கை
விடுக்கின்றேன்.
பொதுபல சேனா மற்றும்
ராவண பலய
போன்ற தீவிரவாத
இயக்கங்களால் முன்னெடுக்கப்படும் போலிப்பிரச்சாரங்களாக
இந்த நாட்டுக்கு
போதைப் பொருட்களை
இறக்குமதி செய்பவர்கள்
என்றும் கருத்தடை
மாத்திரைகளை வழங்குபவர்கள் மற்றும் ஹவாலா உண்டியல்
மூலம் பணத்தினை
அனுப்புபவர்கள் என்பன போன்ற 18 குற்றச்சாட்டுக்களை முஸ்லிம்கள் மீது சுமத்தியுள்ளனர்.
இவ்;வாறு முஸ்லிம்கள்
மீது போலியான
குற்றங்களை சுமத்தி, தீவிர போக்குக்கொண்ட சிங்கள
இளைஞர்களை தம்வசப்படுத்தி
அரசாங்கத்தை பயமுறுத்தி அரசாங்கத்தை அடிபணிய வைத்துள்ளார்கள்.
இதன் எதிரொலியாகவே
பொதுபல சேனா
மற்றும் ராவண
பலய போன்ற
தீவிரவாத அமைப்புக்களை
தடை செய்யமுடியாது
என்று அரசு
வெளிப்படையாகவே கூறிவருகிறது. 30 வருடங்கள்
யுத்தம் செய்த
புலிகளை அடக்கியதாக
மார்தட்டும் அரசு இங்கு வாழும் முஸ்லிம்
சமூகத்தின் மீது பொதுபல சேனா மற்றும்
ராவண பலய
போன்ற தீவிரவாத
அமைப்புக்களால் மேற்கொள்ளப்படும் காட்டுமிராண்டித்
தனங்களை தடுக்கமுடியாமல்
இருப்பது அரசியல்
காரணங்களுக்காவே என்பது புலனாவதாகவும் தெரிவித்தார்.நிகழ்வில்
மௌலவி ஏ.ஏ. அலி அஹமத் (ரஸாதி)
அவர்களினால் முஸ்லிம்களின் ஒற்றுமையும்,
இறைவனின் பாதுகாப்பும்
எனும் தலைப்பில்
பயனும், துஆப்
பிரார்த்தனையும் நிகழ்த்தினார்.
இதில்
கிழக்கு மாகாண
சபை உறுப்பினர்
ஏ.எல்.எம்.நசீர்,
அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி
எம்.ஏ.எம்.அன்சில்,
நிந்தவூர் பிரதே
சசபை தவிசாளர்
ஏ.எம்.அஷ்ரஃப், இறக்காமம்
பிரதேச சபை
தவிசாளர் எம்.எம்.ஜபீர்
மௌலவி,கல்முனை
மாநகர சபை
உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ்,
ஏ.ஏ.பசீர், ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்,
எம்.எம்.முஸ்தபா, எம்;.உமர் அலி,
சம்மாந்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர்
சிரேஷ்ட சட்டத்தரணி
எம்.எம்.முஸ்தபா, தென்கிழக்கு
பல்கலைக்கழக விரிவுரையாளர்களான எம்.பாசில், ரமீஸ்அபூபக்கர் மற்றும் அரசியல்
பிரமுகர்கள் பொதுமக்கள் என பெருந்திறளானோர் கலந்து
கொண்டனர்.
0 comments:
Post a Comment