பாய்ஸ், ரெண்டு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த
துணை நடிகர் சென்னை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை


பாய்ஸ், ரெண்டு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த துணை நடிகர் பாலமுரளி மோகன் (54) சென்னையிலுள்ள அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
சென்னை புரசைவாக்கம் ரெட்டார்ன்ஸ் ரோடு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வரும் பாலமுரளி மோகன், நேற்று இரவு 10மணி அளவில் வீட்டுக்கு வந்து தன் அறையில் உறங்கச் சென்றார். இன்று காலை அவரது மனைவி சீதாராணி, அவரது அறையின் கதவைத் தட்டியுள்ளார். ஆனால் பதில் எதுவும் வராத நிலையில், பொலிஸுக்கு தகவல் கொடுத்தார். பொலிஸார் வந்து, கதவைத் திறந்து பார்த்தபோது, அவர் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர், வம்சம், தென்றல் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகராகவும், பாய்ஸ், ரெண்டு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
சென்னை வேப்பேரி, லெட்டன்ஸ் சாலையை சேர்ந்தவர் முரளி மோகன் (வயது 54). டி.வி. நடிகராக இருந்து வந்தார். இவருடைய மனைவி சுமதி (52). இவர் லேடி ஆண்டாள் பள்ளியில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். இவர் களுக்கு அபிஷேக் என்ற ஒரு மகன் உள்ளார். அவர் அமெரிக்காவில் பணிபுரிகிறார்.
முரளி மோகன் சொந்த வீட்டில் தனது அக்காள் ஜெயதேவி மற்றும் அவருடைய கணவர் சந்திரமோகனுடன் வாழ்ந்து வந்தார். இவர் பெண்கள், வம்சம் போன்ற டி.வி. தொடரிலும், சிவாஜி உள்பட பல்வேறு திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
இவரை பெரும்பாலானோர்ஹார்லிக்ஸ்மாமாஎன்று அழைப்பார்கள். அதற்கு காரணம்ஹார்லிக்ஸ்விளம்பரத்தில் சிறு பையன் ஒருவனுடன் நடித்து இருக்கிறார்.
நேற்று முன்தினம் முரளி மோகனின் மனைவி சுமதி, தாம்பரத்தில் உறவினருடைய திருமணத்துக்கு சென்றுவிட்டார். இதனால் முரளி மோகன் வீட்டில் தனியாக இருந்தார். டி.வி. நடிகராக இருக் கும் முரளி மோகனுக்கு, கடந்த சில மாதங்களாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அவர், மனவருத்தத்தில் காணப்பட்டார். இந்த நிலையில் மனைவி உறவினருடைய திருமணத்துக்கு சென்றிருந்த நேரத்தை பயன்படுத்தி, வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருமணத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சுமதி வீட்டில் கணவர் தூக்குப்போட்டு இறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவலைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றினார்கள். இதுகுறித்து வேப்பேரி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் என்.எம்.தியாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


இதுகுறித்து அவருடைய மனைவி சுமதி கூறும்போது, ‘கடந்த 6 மாதங்களாக நடிக்க வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் மிகவும் மனவருத்தத்தில் காணப்பட்டு வந்தார். சமீபத்தில் ஒரு டி.வி. தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதற்குள் இந்த முடிவை எடுத்துவிட்டார்என்றார்.
இவரது தற்கொலை குறித்து வேப்பேரி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் எனவும் அறிவிக்கப்படுகின்றது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top