எச்சரிக்கையும்விடுதலையும்எதிர்காலப்போக்கும்..!!

(துறையூர் .கே மிஸ்பாஹுல் ஹக்)



அளுத்கமையில் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்ற பெயரில் பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டார்கள்.இவர்களை விடுவிக்க பொது பல சேனா அமைப்பானது பல அடிப்படையில் கோரிக்கை விடுத்த போதிலும் அக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.அதைத் தொடர்ந்து குறித்த 13 நபர்களையும் விடுவிக்கத் தவறின் ஞானசார தேரர் தீக்குளிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்தார்.
இவ் எச்சரிக்கைக்கு அடி பணிந்த பொலிஸார் உயர் மட்ட அழுத்தத்தின் பெயரில் அவர்களை விடுவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மையில் இவ் எச்சரிக்கை சாதாராணமாக நோக்கப்பட வேண்டிய ஒன்றல்ல.அதிலும் ஞானசார தேரர் தான் சொல்லுவதை யாருக்கும் அச்சமின்றி செய்யும் ஒருவர். தீக்குளித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அவர் தீக்குளிக்குளிக்கும் பட்சத்தில் அவர் தங்கள் சமூகத்திற்காக போராடிய ஒருவராக பார்க்கப்பட்டு, மக்கள் கொதித்தெழுந்து அரசாங்கத்திற்கு எதிராக பெரும் பாண்மை இனத்தவரது புரட்சிக்கு கூட ஏற்பட வழி வகுக்கலாம்.
ஏன்? தீக்குளிக்க முயற்சித்தாலும் அதுவே பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம்.எனினும்,விடுதலை செய்தலும் சாதாரணமாக நோக்கப்பட வேண்டிய ஒன்றல்ல.ஏனெனில்,தாங்கள் எது செய்தாலும் தங்களைப் காப்பாற்ற தங்கள் அமைப்பு வரும் என்ற நம்பிக்கையுடன் தங்கள் முஸ்லிம்களிற்கெதிரான செயற்பாடுகளை கிஞ்சித்தும் அச்சமின்றி மிகத் தைரியமாக அதிகரிப்பார்கள்.

இதனால் மிகப் பாரிய விளைவுகளை முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்.நீதி,நியாயம்,தர்மம்,மத,இன வேறிபாடின்றி எல்லா இனங்களையும் ஒரு கண் கொண்டு பார்த்து அரசாங்கமும்,பொலிஸாரும் குற்றம் செய்வோரை தண்டிக்கும் மனோ நிலையில் இருந்தால் எவ் எதிர்ப்புகளையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.இவர்களை விடுதலை செய்தமை அரசாங்கமும்,பொலிஸாரும் பக்கச் சார்பாகவே நடக்கிறார்கள் என்பதையே சுட்டி நிற்கிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top