பிறந்த போதே
என்னை கொன்று விட சொன்னார்கள்!
இந்திய
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உருக்கம்
நான்
பிறந்தபோது என்னை கொன்று விட சொன்னார்கள்’
என்று இந்திய
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
உருக்கமாக கூறியுள்ளார்.
இந்திய மத்திய பிரதேச மாநி லம், போபாலில்
நடைபெற்ற மாணவர்கள்
கூட்டத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர்
ஸ்மிருதி இரானி
கலந்து கொண்டார்.
மாணவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார். அப்போது
அவர் கூறியதாவது:
பெண்
குழந்தை என்றாலே
சுமை என்று
என் தாயாரிடம்
கூறிய சிலர்,
நான் பிறந்த
போதே கொன்று
விடும்படி கூறியுள்ளனர்.
ஆனால், மன
உறுதிமிக்க என் தாயார் அதை கேட்காமல்
என்னை பாதுகாத்து
வளர்த்ததால்தான் இன்று உங்கள் முன்பாக இந்த
நிலையில் நிற்கிறேன்.
பெண் சிசுக்கொலை
என்பது சமூகத்தில்
ஊடுருவியுள்ள கொடிய நம்பிக்கை. இதை முழுவதும்
வேரறுக்க வேண்டும்.எனத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment