புனித ரமழான் மாதம்
தொடங்கியதையொட்டி
அமெரிக்க ஜனாதிபதி
ஒபாமா வாழ்த்து
புனித
ரமழான் மாதம்
தொடங்கியதையொட்டி, உலகில் உள்ள
அனைத்து முஸ்லிம்களுக்கும்
அமெரிக்க ஜனாதிபதி
ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது
குறித்து ஜனாதிபதி
ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முஸ்லிம்கள்
நோன்பு மற்றும்
பிரார்த்தனை வழியாக பக்தியை மேற்கொண்டு தன்னை
உணரும் காலமாக
இந்த மாதம்
திகழ்கிறது.
சமூகத்தில்
பொருளாதார ரீதியாக
போராடிக் கொண்டிருப்பவர்கள்
மற்றும் சமத்துவமற்ற
முறையில் நடத்தப்படுபவர்கள்
உள்ளிட்டோருக்கு உதவும் விதமாக உலகம் முழுவதும்
உள்ள முஸ்லிம்களுக்கு
ரமழான் மாதம்
ஒரு சந்தர்ப்பத்தை
வழங்கியுள்ளது.
அமெரிக்காவில்
சமூக அதிகாரமளித்தல்
செயல்பாடுகளில் இஸ்லாமிய அமைப்புகளின் பங்கு மகத்தானது.
தங்களது
அர்ப்பணிப்பு உணர்வால் அனைவருக்காகவும் வேலை வாய்ப்புகளை
உருவாக்கும் அவர்கள், வருவாய் ஏற்றத்தாழ்வுகளை களைவதற்காகவும்,
வறுமையை ஒழிக்கவும்
உழைக்கிறார்கள்.
தங்களது
தொண்டு நடவடிக்கையால்
மட்டுமின்றி தனிப்பட்ட விதத்திலும் மாணவர்கள், தொழிலாளர்கள்
மற்றும் அவர்களது
குடும்பத்தினருக்கு கல்வி, திறன்
வளர்த்தல் மற்றும்
உடல் ஆரோக்கியத்தில்
அக்கறை காட்டுதல்
ஆகியவற்றில் முஸ்லிம்கள் முனைப்புடன் செயலாற்றுகின்றனர்.
உலகில்
போர் மற்றும்
வன்முறையால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய புனிதமான மாதம்
நமக்கு நினைவுக்கு
வருகிறது. இந்த
மாதத்தின்போது, "அமைதியும், நீதியும்
தொடர வேண்டும்,
ஒவ்வொரு மனிதனும்
கண்ணியத்தை காக்க வேண்டும்' என்பது நம்முடைய
பொதுவான வேண்டுகோளாக
இருக்கிறது என்று ஜனாதிபதி ஒபாமா அந்த அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment