ஓட்டபந்தய
போட்டியில் 8 மாத கர்ப்ப வயிற்றுடன்
கலந்து கொண்ட
வீராங்கனை
உலக
ஓட்டப்பந்தய வீராங்கனை அலிசியா மோண்டானோ (வயது
29) இவர் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று
உள்ளார். இவர்
அமெரிக்காவில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 8 மாத கர்ப்ப வயிற்றுடன்
கலந்து கொண்டார்
. இவர் தன்னுடைய
ஓட்டத்தை 2 நிமிடங்கள் 32.13 விநாடிகளில்
கடந்து சாதனை
புரிந்துள்ளார்.கர்ப்பமான நேரத்தில் நடக்கவே அச்சப்படும்
பெண்களுக்கு மத்தியில், குழந்தையை சுமந்து கொண்டு
ஓடி சாதனை
படைத்துள்ளார் அலிசியா. ஹார்னட்ஸ்டேடியத்தில்
குவிந்திருந்த ரசிகர் கூட்டத்தினரின் ஆரவாரத்திற்கு இடையில்
இவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.
ஏற்கனவே
கடந்த 2010 ஆம் ஆண்டில் மொனாக்கோவில் நடைபெற்ற
ஓட்டப்பந்தயத்தில் 1:57:34 நேரத்தில் கடந்த
இவர், இந்தமுறை
தன்னுடைய முந்தைய
சாதனையில் 35 நிமிடங்கள் தாமதமாக கடந்துள்ளார்.
இது
குறித்து அலிசியா
கூறியதாவது:-
"கர்ப்பமான வயிற்றுடன் ஓடினாலும் நான்
மிகவும் தன்னம்பிக்கையாகவே
உணர்ந்தேன் ஒரு பெண் கர்ப்ப வயிற்றுடன்
ஓடினால் மற்றவர்கள்
என்ன நினைப்பார்கள்
போன்ற பயத்தை
எல்லாம் நான்
தூக்கி எறிந்துவிட்டுதான்
ஓடினேன். நான்
கர்ப்பமாக இருக்கின்றேன்
அவ்வளவேதான். இதற்காக என்னுடைய தினசரி செயல்பாடுகளை
மாற்றிக் கொள்ளவில்லை" இவ்வாறு
அவர் கூறினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.