5 உலகக் கிண்ணத் தொடர்களில் விளையாடிய வீரர்கள் பட்டியலில்
சயீத் அப்ரிடி மஹெல ஜெயவர்தன இணைந்து கொள்கிறார்கள்
2015 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதன் மூலம்
5 உலகக் கிண்ணத்
தொடர்களில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் மஹெல
ஜெயவர்தனவும்
இணைந்து கொள்கிறார். இவரின் முதல் உலகக்கிண்ணப்
போட்டி 1999 ஆம் ஆண்டாகும்.
பாகிஸ்தானின்
சயீத் அப்ரிடிக்கும்
இது 5-வது
உலகக் கிண்ணத்தொடர்.
இவருக்கும் 1999-ம் ஆண்டு தொடர்தான் முதல்
உலகக் கோப்பைத்
தொடராகும்.
அதிக
உலகக் கிண்ணத்
தொடர்களில் விளையாடியவர் என்ற பெருமையை பாகிஸ்தானின்
ஜாவீத் மியண்டாட்
முதலில் பெற்றார்.
கடந்த 1975 ஆம் ஆண்டு தொடரில் அறிமுகமான
மிண்டாட், முதல்
6 உலகக் கிண்ணத்
தொடர்களிலும் விளையாடியுள்ளார்.
சச்சின்
டெண்டுல்கர் 1992 முதல் 2011 வரை நடைபெற்ற உலகக்
கிண்ணத் தொடர்களில்
பங்கேற்று, அதிக உலகக்கிண்ணத் தொடர்களில் பங்கேற்றவர்
என்ற சாதனையை
ஜாவீத் மியண்டாட்டுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுவரை
17 பேர் 5 அல்லது
அதற்கும் மேற்பட்ட
உலகக் கிண்ணத்
தொடர்களில் விளை யாடியுள்ளனர்.
0 comments:
Post a Comment