இவரைக் கண்டீர்களா?
உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கவும்



இப் படத்தில் இருப்பவரை கண்டால் உடனடியாக அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சமுக வலைத்தளம் மூலம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாகக் கூறப்படும் இச் சந்தேக நபரை  குற்றத் தடுப்பு பிரிவினர் தேடி வருகின்றனர். குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாடொன்றையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே குறித்த சந்தேக நபர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைக் கைதுசெய்ய உதவும் படியும் குற்றத்தடுப்பு பிரிவினர் , பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவரின் விபரங்கள் வருமாறு:
பெயர்: திசாநாயக முதியன்சலாகே சுஜித் நிலந்த
முகவரி: 161/12 , பன்சல வீதி, கலுகல்பிடிய, வீதி , சப்ரின்வெளி வீதி , பதுளை. ( இம் முகவரியிலிருந்து தப்பியுள்ளார்)
அடையாள அட்டை இலக்கம்: 731980586 V
சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தொலைபேசி இலக்கங்கள் - 011-2422176 / 011-2326979 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top