SMS மூலமாக முன்வைக்கப்படும்
குற்றச்சாட்டுக்களை
என்னால் விசாரிக்க முடியாது
- முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் ரவூப் ஹக்கீம்
எஸ்.எம்.எஸ்
மூலமாக முன்வைக்கப்படும்
குற்றச்சாட்டுக்களை விசாரிக்க முடியாது
என முஸ்லிம்
கங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருதில்
அண்மையில் இடம்பெற்ற
கூட்டத்தில்
முஸ்லிம் காங்கிரஸ்
உறுப்பினர்கள் குழப்பம் விளைவித்ததாக முன்னணியின் தவிசாளரான
பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியிருந்தார். இது குறித்து தலைவர் ரவூப் ஹக்கிமுக்கு எஸ்.எம்.எஸ் மூலம்
முறியீடு செய்துள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கொழும்பில்
நேற்று 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர்
எழுப்பிய கேள்விக்குப்
பதிலளிக்கையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப்
ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர்
ரவூப் ஹக்கீம் இதுகுறித்து தொடர்ந்து தெரிவித்ததாவது, ,"எஸ்.எம்.எஸ் மூலமாக
முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு
தாம் தயாரில்லை.
இது வங்குரோத்து
அரசில் செய்பவர்களே
இவ்வாறு முறைப்பாடுகளை
முன்வைத்து விட்டு விசாரணை நடாத்துமாறு கோருகின்றனர்.
சிலர் கையடக்கத்
தொலைபேசியில் விசாரணை நடத்துமாறு இரண்டு வரிகளில்
குறுந்தகவல் மூலம் முறைப்பாடு செய்து விட்டு
ஊடகங்களுக்கு 10 பக்கங்களில் அறிக்கை விடுகின்றனர்.
எனது
கையடக்க தொலைபேசிக்கு
ஒரு நாளைக்கு
பல குறுந்தகவல்கள்
வருகின்றன. யார் எவர் எஸ்.எம்.எஸ். அனுப்புகின்றனர்
என்று எனக்கு
தெரியாதுள்ள நிலையில் எவ்வாறு இந்த முறைப்பாட்டுக்கு
பதிலளிப்பது. குறுந்த தகவல் முறைப்பாட்டுக்கு பதிலளிக்க நான் ஒருபோதும் தயாரில்லை.
பொறுப்புள்ள ஒரு அரசியல் இயக்கமாக இருந்தால்
உரிய முறையில்
முறைப்பாடு செய்திருக்க வேண்டும்.
குறைந்த
பட்சம் பொலிஸ்
நிலையத்திலாவது முறையிட்டிருக்க வேண்டும். அல்லது
உரிய ஆதாரங்களுடன்
எழுத்து மூலம்
தன்னிடம் முறையிட்டிருக்க
வேண்டும். அப்படியென்றால்
மாத்திரமே தன்னால்
நடவடிக்கை எடுக்க
முடியும்" என்றார்.
-
0 comments:
Post a Comment