சவூதி அரேபியாவில்
நடனமாடி அழைத்து வரப்பட்ட
100 வயது மணமகன்!
சவூதி
அரேபியாவில் 100 வயது தாத்தா ஒருவருக்கு
திருமணம் நடைபெற்றது. ஆட்டம் பாட்டத்துடன்
நடந்த திருமண
ஊர்வலத்தில் 100 வயது மணமகன் நடனமாடியபடியும் கை
தட்டியபடியும் வந்து அனைவரையும் ஆச்சரியபடவைத்தார். அவர் மணமகள் முன் அழைத்து
செல்லப்பட்ட போது மிக மகிழ்ச்சியாக தோன்றினாராம்.
மணமகள்
சந்திப்புக்காக அழைத்து செல்லபட்டபோது மாப்பிள்ளையின் விருந்தினர்கள்
நடனமாட அழைத்து
இந்த யூடியூப்
வீடியோ படம்
உள்ளூர் செய்தி
பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது.ஆனால் அந்த
பத்திரிகை திருமணம்
எங்கு நடைபெற்றது
மற்றும்
மணமகளின் வயதை குறிப்பிட வில்லை.
கடுமையான
சட்டதிட்டங்கள் பின்பற்றப்படும் சவூதியில்
100 வயது தாத்தா
ஒருவர் திருமணத்திற்கு
வயது தடையில்லை
என்பதை நிரூபித்து
உள்ளார். இந்த
திருமண வீடியோ
தற்போது சமூக
இணையதளத்தில் வெகுவாக பரவி வருகிறது.
0 comments:
Post a Comment