உலக பணக்காரர்கள்
பட்டியலில் பில் கேட்ஸ்
16-வது முறையாக இவ்வாண்டும் முதலிடம்
மைக்ரோ
சாப்ட் நிறுவனத்தின்
தலைவரும், பிரபல
சமூக சேவகருமான
பில் கேட்ஸ்
உலக பணக்காரர்கள்
பட்டியலில் மீண்டும் முதல் இடம் பிடித்து
சாதனை படைத்துள்ளார்.
போர்ப்ஸ்
பத்திரிகை வெளியிட்டுள்ள
இந்த (2015) ஆண்டிற்கான செல்வந்தர்கள் பட்டியலில் முந்தைய
ஆண்டை விட
3.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அதிக
சொத்துகளுடன் மொத்தம் 79.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரராக
பில் கேட்ஸ்
அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு
அடுத்த இரண்டாவது
இடத்தில் தொலைத்தொடர்பு
உலகின் முடிசூடா
சக்கரவர்த்தியாக திகழும் கார்லோஸ் ஸ்லிம் ஹேலு
சுமார் 77.1 பில்லியன் சொத்துகளுக்கு உரிமையாளராக அடையாளம்
காணப்பட்டுள்ளார்.
மூன்றாவது
இடத்தில் 72.7 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளின்
உரிமையாளராக உள்ள நிதி நிறுவன அதிபர்
வாரன் பப்பெட்
அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த
21 ஆண்டுகளில் வெளியான போர்ப்ஸ் செல்வந்தர்கள் பட்டியலில்
பில் கேட்ஸ்
16-வது முறையாக
முதல் இடத்தை
தக்கவைத்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment