பாலியல் புகாரில் சிக்கிய வங்கதேச வீரர் ஹுஸைன்
மீதான வழக்கு வாபஸ்!
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வங்கதேச வீரர் ரூபெல் ஹுஸைனின் சாதனையை தொடர்ந்து, அவர்
மீது கொடுத்த பாலியல் பலாத்கார புகாரை வாபஸ்
பெறுவதாக அவரது முன்னாள் காதலியும்
நடிகையுமான நஸ்னின் அக்தர் தெரிவித்துள்ளார். உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் காலிறுதிதிக்கு தகுதிபெறும் மிக
முக்கியமான ஆட்டத்தில் வங்கதேச அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த
போட்டியில், வங்கதேச அணி
15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் பந்துவீசிய பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய வங்கதேச பந்துவீச்சளார் ரூபெல் ஹுஸைன் தொடக்கத்தில் இங்கிலாந்து வீரர்களான இயார்ன் பெல்,
அடுத்து கேப்டன் மோர்கன் ஆகியோரை வீழ்த்தினார். இறுதியில் முக்கிய கட்டத்தில் தொடர்ந்து சிக்சர் அடித்து மிரட்டிய பிராட் மற்றும் ஆண்டர்சன் ஆகியோரையும் ரூபெல் ஹுஸைன் வீழ்த்தினார். இக்கட்டான சூழலில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இங்கிலாந்து அணியை
வீழ்த்தி
வங்கதேச அணி உலகக்
கிண்ணக்
கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக காலிறுதி சுற்றுக்கு முன்னேற உதவியது.
இதில் வங்கதேச அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ரூபெல் ஹுஸைனின் வாழ்க்கையிலும் இந்த வெற்றி திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, மைதானத்தில் ரூபெல் ஹுஸைன் காட்டிய திறமையால் மனமகிழ்ந்த அவரது முன்னாள் காதலி
நஸ்னின் அக்தர் மிகுந்த உற்சாகம் அடைந்து அவர் மீது கொடுத்துள்ள பாலியல் வழக்கினை வாபஸ்
பெறுவதாக
தற்போது அறிவித்துள்ளார்.
இது குறித்து நஸ்னின் அக்தர் கூறியிருப்பதாவது, ஹுஸைன் செய்த சாதனையால் நான்
தற்போது மிகுந்த சந்தோஷமாக உள்ளேன். அவரை நான் மன்னித்து விட்டேன். இதனால், அவர்
மீது கொடுத்திருந்த வழக்கை வாபஸ் பெறப்போவதாக அவர்
கூறியுள்ளார். வங்கதேச சினிமா நடிகையான நஸ்னின் அக்தருக்கும் ரூபெல் ஹுஸைனுக்கும் இடையே காதல் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம், நஸ்னின் அளித்த புகாரில்,
ரூபெல் ஹுஸைன் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததால், இருவரும் கணவன்- மனைவி
போல இணைந்து வாழ்ந்ததாகவும், ஆனால், திடீரென ரூபெல் ஹுஸைன் திருமணம் செய்ய
மறுப்பு தெரிவிப்பதாகவும் புகார் கூறியிருந்தார். உலகக்
கிண்ணப் போட்டிக்கு தயாராகி வந்த
வேளையில் இந்த புகார் காரணமாக ரூபெல் ஹுஸைன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து கடந்த
ஜனவரி 11 ஆம் திகதி டாக்கா நீதிமன்றம் அவரை ஜாமினில் விடுவித்தது. இதனையடுத்து அவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட
வாய்ப்பு கிடைத்தது.
0 comments:
Post a Comment