உலகக் கிண்ணக்கிரிக்கெட்
வங்க தேசம்
6 விக்கெட்டுக்களால் அபார வெற்றி
( புள்ளிவிபரப் பட்டியல் இணைப்பு )
உலகக்
கிண்ணப் போட்டியில் இன்று நடந்த
27-வது லீக்
ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேசம்
- ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
நியூசிலாந்தில்
நடைபெற்ற இந்த
ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வென்ற வங்க
தேச அணி
முதலில் பீல்டிங்கை
தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி சிறப்பான
ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
50-வது ஓவர்கள்
முடிவில் அந்த
அணி 8 விக்கெட்டுகள்
இழந்து 318 ஓட்டங்கள் குவித்தது. ஸ்காட்லாந்து அணியில்
அதிகபட்சமாக தொடக்க ஆட்டகாரர் கோயட்சர் அபாரமாக
ஆடி 156 ஓட்டங்கள்
எடுத்தார்.
வெற்றிக்கு
319 ஓட்டங்கள் தேவை என்ற இலக்குடன் வங்க
தேச அணி
களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக
தமிம் இக்பால்,
சவும்யா சர்க்கார்
ஆகியோர் களமிறங்கினர்.
சர்க்கார் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பெவிலியன்
திரும்பினார். அதன் பின்னர் களமிறங்கிய மஹ்மதுல்லா,
தமிம் இக்பாலுடன்
கைகோர்த்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி
ஓட்டங்கள் சேர்த்தனர்.
மஹ்மதுல்லா
62 ஓட்டங்களுக்கும், தமிம் இக்பால்
95 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்க அடுத்து
வந்த முஷ்பிகுர்
ரஹிம் 60 ஓட்டங்கள்
எடுத்து நம்பிக்கை
ஏற்படுத்தினார். பின் இணைந்த சாகிப் அல்
ஹசன், சபிர்
ரஹ்மான் ஜோடி
அணியை வெற்றி
பாதைக்கு அழைத்துச்
சென்றது. சாகிப்
அல் ஹசன்
52 ஓட்டங்களுக்கும், சபிர் ரஹ்மான்
42 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முடிவில் வங்க
தேச அணி
48.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 322 ஓட்டங்கள் எடுத்து
6 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றது.
0 comments:
Post a Comment