உலகின் மிக வயதான பெண்மணி
117-வது பிறந்த நாளை கொண்டாடினார்

ஜப்பான் நாட்டின் ஒசாகா என்ற நகரை சேர்ந்த மிசாவோ ஓக்கவா என்ற பெண்மணி ஒருவர் இன்று தனது 117-வது பிறந்தநாளை கொண்டாடினார் என அறிவிக்கப்படுகின்றது.
ஓக்கவாவின் வாழ்க்கை மூன்று நூற்றாண்டுகள் கடந்து உள்ளது. ஓக்கவா அவர்கள் தன்னுடைய நீண்ட நாள் வாழ்க்கைக்கு  உணவும், போதுமான தூக்கமும் தான் காரணம் என்று பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.
கடந்த 2013 ஆம் வருடம் ஓக்கவா அவர்களுக்கு உலகில் வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழ் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top