கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றில்
மாணவர்களிடமிருந்து
பணம் அறவிட்டமை
கல்வி அமைச்சு அதிகாரிகளின் தலையீட்டால்
தடுக்கப்பட்டதாக அறிவிப்பு
கல்முனைக்
கல்வி வலயத்திலுள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குரிய
விண்ணப்பத்தில் மாணவர்கள் ஒப்பமிடும்போது அந்த மாணவர்களிடமிருந்து பணம் அறவிட்டமை கல்வி
அமைச்சு அதிகாரிகளின் தலையீட்டால் தடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
கடந்த
4 ஆம் திகதி புதன்கிழமை குறித்த தேசிய பாடசாலையில் இவ்வருடம் உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள
மாணவர்கள் குறித்த பாடசாலை விண்ணப்பத்தில் ஒப்பமிடுகையில் தலா 500 ரூபா வீதம் அறவிடப்படுவதாக
கல்முனை வலய கல்வி அலுவலகத்திற்கும் கல்வி அமைச்சுக்கும் தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புக்கள்
மூலம் முறையிடப்பட்டிருந்தது.
இது
குறித்து கல்வி அமைச்சினால் கல்முனை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதுடன்
பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இம்முறப்பாடுகளுக்கு
அமைய துரிதமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மேற்படி பண அறவீட்டை தடுத்து நிறுத்தியதுடன்
மாணவர்களிடம் இருந்து அறவிடப்பட்ட பணத்தை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை
எடுத்ததாக வலயக் கல்வி அலுவலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாடசாலை
அபிவிருத்திச் சங்கத்தின் பெயரையும் பழைய மாணவர் சங்கத்தின் பெயரையும் பயன்படுத்தி
தொடர்ச்சியாக மாணவர்களிடம் பல்வேறு விடயங்களுக்காக பண அறவீடுகள் இடம்பெற்று வருவதாக
முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment