கிழக்கு மாகாணத்தில்
வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு
ஐரோப்பிய யூனியன்
36 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது.
கடந்த
டிசம்பர் மாதம் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அசாதாரண நிலை காரணமாக
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஐரோப்பிய யூனியன் 36 மில்லியன் யூரோக்களை
வழங்கியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இந்நிதியின்
மூலம் பாதிக்கப்பட்ட விவசாய அணைகட்டுக்கள், குளங்கள் மற்றும் மக்களின் குடியிருப்புக்கள்
மீள் நிர்மாணம் செய்யப்படுவதுடன் வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச
விதை நெல், இலவச உரம் ஆகியன வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.
கிழக்கு
மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக விவசாய நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டதுடன்
விவசாயிகள் மிகக் குறைந்த விளைச்சலையும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பிரதேசத்தில்
ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நெற்செய்கையில் இருந்து கிடைக்கப்பெற்ற விளைச்சல் 60 சதவீதமாகக்
குறைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment