இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன்
முஸ்லிம் காங்கிரஸ்
பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடல்
உத்தியோகபூர்வ
விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய
வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
அமைச்சர் ரவூப்
ஹக்கீம் தலைமையிலான
முஸ்லிம் காங்கிரஸ்
பிரதிநிதிகள் இன்று 7 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சந்தித்துக்
கலந்துரையாடினர்.
வடமாகாணம்
இந்திய அரசாங்கத்தால் எவ்வாறு கவனிக்கப்படுகின்றதோ, அதுபோன்று கிழக்கு மாகாணத்திலும்
தமிழ், முஸ்லிம் மக்களை இந்தியா கவனிக்கும் என்று
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா
சுவராஜ் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச் சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில்
நடைபெற்றது. அதன்போதே இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
கிழக்கு
மாகாணத்தில் அமைந்துள்ள ஆட்சி சம்பந்தமாகவும் விரிவாக இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன் எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு வருகை
தரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்
விஜயத்தின் விவரம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும் வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு
இந்திய அரசு எவ்வாறான உதவிகளை மேற்கொண்டு வருகின்றதோ அதேபோல கிழக்கு மாகாண அபிவிருத்திக்கும் இந்திய அரசு உதவிகளை மேற்கொள்ளும் என அவர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் கட்சியின் செயலாளர் நாயகம் இராஜாங்க
அமைச்சர் எம்.ரீ.ஹஸனலி,
கட்சியின் பிரதித்
தலைவரும் கிழக்கு
மாகாண முதலமைச்சருமான
நஸீர் அஹமட், கட்சியின் வெளிவிவகார
பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ்
ஆகியோரும் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment