தேசிய ஒளடத ஒழுங்குமுறை அதிகாரசபை சட்ட மூலம்


இலங்கை நாடாளுமன்றத்தில் மேற்படிச் சட்ட மூலம் கடந்த 6 ஆம் திகதி (06.03.2015) வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது மிகவும் பாரட்டத்தக்கது. இதற்காக அதிமேதகு ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் றாஜித சேனரத்ன ஆகியோருக்கு நன்றிகள் உரித்தாகும்.
அளவுக்கதிகமான மருந்துவகைகள் இறக்குமதியைக் கட்டுப்படுத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட தரக்கட்டுப்பாடும் விலைக்கட்டுப்பாடும், வைத்தியர்கள்; தமது மருந்துச் சிட்டைகளில் மருந்துகளின் இயற் பெயரைக் குறிப்பிடுவதற்கான ஏற்பாடு, பாமசிகளில் வைத்தியர்களின் மருந்துச் சிட்டையின்றி மருந்து விற்பதற்குத் தடை, பெரும்பான்மையான மருந்து வகைகளை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கான எற்பாடுகள் போன்ற திட்டங்கள் மேற்படிச் சட்டத்தின் முலம் செயற்படவிருப்பது வரவேற்கத்தக்கது.
ஆயினும் எதிர்காலத்தில் மருந்துகளைப் பரிந்துரை செய்பவர்களும், விநியோகம் செய்பவர்களும் பாவனையாளரும், விளம்பரம் செய்பவர்களும் இந்நாட்டில் ஒரு சீரான மருந்துப்பாவனையை முன்னெடுப்பதில் முக்கிய பங்காளிகளாக மாற்றப்படுவதன் முலம் மட்டுமே இச்சட்டத்தை அமுல் நடத்தவும் இலங்கையின் பல கோடி வெளி நாட்டுச் செலவாணியை மீதப்படுத்தவும் முடியும்.
இதனை பின்வரும் மேலதிக நடவடிக்கைகள் ஊடாக நிறைவேற்ற முடியும்.
•             மருந்து பாவனை தொடர்பான கொள்கைகளை அமுல் நடாத்துவதற்கும் அதன் விளைவுகளைக் கண்காணிக்கவும் ஒரு தேசிய சபை ஸ்தாபித்தல்
•             மாவட்டம் தோறும் மருந்துப் பாவனையை கண்காணிக்கவும் முன்னேற்றவும் சிகிச்சைக் குழுக்கள் ஏற்படுத்தல்;.
•             பொதுமக்கள் தங்களுக்கு நோய் ஏற்பட்டவுடன் மருந்து உடகொள்வதை நாடாமல் பொறுமையுடனும்  நம்பிக்கையடனும் ஓய்வு எடுத்து நல்ல சுகாதார, உணவு பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்கவும் தகுந்த வைத்திய ஆலோசனை பெறவும்; அறிவூட்டல்கள் பாடசாலை மட்டத்தில் இருந்து ஆரம்பித்தல்;.
•             மருந்துகள் தொடர்பாக மருத்துவப் பணியாளருக்கும் பொது மக்களுக்கும் சுதந்திரமானதும் பக்கசார்பற்றதுமான அறிவூட்டல்கள் செய்தல்.
•             நோயாளிகள் தமக்கு வழங்கப்படும் மருந்துவகைகளைக் குறைந்தது 03 தினங்களாவது பாவிக்காது மீள் பரிசோதனைக்கு செல்வதைத் தவிர்த்தல்;.
•             ஒருவருக்கு கொடுக்கப்பட்ட மருந்தை மற்றவர்கள் பாவித்தலைத் தவிர்த்தல்
•             மருத்துவ ஆலோசனையின்றி தன்னிச்சையாக மருந்துகளை உட்கொள்தல் மற்றும் ஆய்வுகூட வைத்திய பரிசோதனைகளைச் செய்தல் போன்றவற்றைத் தவிர்த்தல்.
•             மருந்துகள் தொடர்பான உண்மைக்குப் புறம்பான தகவல்கள்,விளம்பரங்கள்,நம்பிக்கைகள்;, யூகங்கள்  என்பன மூலம் பாவனையாளர் மனதில் ஏற்படும் தாக்கங்களைக் கழைய நடவடிக்கையெடுத்தல்.
•             அத்தியாவசிய மருந்துப்பட்டியல் தயாரிக்கப்பட்டு காலத்திற்கு காலம் புதுப்பித்தல்.
•             மருத்துவப் பணியாளரும் நுகர்வோரும் பார்வையிடக் கூடியவாறு மருந்துகள் தொடர்பான சுதந்திரமானதும் பக்கசார்பற்றதுமான தகவல்கள் பகிரங்கமாக கிடைத்தல.;
•             முறைகேடாக மருந்துகள் பரிந்துரை செய்வதைத் தூண்டும் பொருளாதார அல்லது வேறு அனுகூலங்களை வழங்கும் செயற்பாடுகளை இல்லாதொழிக்க சட்ட ஒழுங்குகள் ஏற்படுத்தல்
•             தரம் வாய்ந்த மருந்துகளினதும் பயிற்றப்பட்ட சுகாதார ஊழியர்களினதும்; தட்டுப்பாட்டைத் தவிர்க்க அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்தல்.
•             வைத்தியர்கள் நோயாளர் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பான அச்சம் இன்றி. நோயாளியைத் தொடர்ச்சியாக கண்காணிக்கும் வாய்ப்பைப் பெறவும் வெளிநோயளர் சிகிச்சைக்கு வருபவர்களின் தகவல்கள் கணனிகளில் பதியப்பட்டு; கண்கணிக்கும் முறை நடைமுறைப்படுத்தல்.
•             பெரும்பாலான தனியார் சிகிச்சை நிலையங்களில் வைத்தியரின் கட்டணங்கள் நோயாளிக்கு வழங்கப்படும் மருந்துகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வைத்தியரின் கட்டணங்களை வேறு வகையில் செலுத்துவது மூலம் அல்லது வைத்தியக் காப்புறுதி முறைமையை அமுல் படுத்துவதன் மூலம் அவசியமற்ற மருந்துகள் பரிந்துரை செய்யப்படுவதைக் குறைத்தல்.
•             அவசர மருத்துவ சேவை வழங்குவதற்கான அம்புலன்ஸ் சேவை எல்லா பிரதேசங்களிலும் ஏற்பாடு செய்தல் மூலம் தேவையற்ற மருந்துப்பாவனைகளைத் தவிர்த்தல்
•             சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் குறைந்தது ஒரு அரச மருந்துச் சாலை (ஒசுசல) திறந்து நடத்துவதன் மூலம் மருந்து விநியோகத்தில் குறைபாடுகளை நீக்குதல்
•             வைத்தியர்களினதும் மற்றும் வைத்திய சாலை, ஆய்வுகூட கட்டணங்களைக் கட்டுப்படுத்தல்

டாக்டர் எம். ஐ. எம். ஜெமீல்
தலைவர், சிரேஸ்ட பிரஜைகள் ஒன்றியம், சாய்ந்தமருது



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top