தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி
பொதுத் தேர்தல்  2015 க்கான  தேர்தல்   விஞ்ஞாபன


கிழக்கு மாகாணத்தை ஒரு ஏற்றுமதி வலயமாக மாற்றியமைப்பதுடன் எமது ஒவ்வொரு  பிராந்தியத்தின் பொருளாதாரத்தை மேன்மை அடையச் செய்து இங்கு வாழும் சகல இன மக்களின் வாழ்வாதரத்தையும்சுற்றாடல் அபிவிருத்தியையும் மேன்படுத்துதலை  நோக்கமாகக் கொண்ட எமது தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியானது பல தரப்பட்ட  துறை சார்ந்த அனுபவ முதிர்ச்சியுள்ள கல்விமான்களையும்புத்தி ஜீவிகளையும் தனது ஆலோசனைக் குழுவாகவும்சமூக வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட கல்வியில் தேர்ச்சியுள்ள துடிப்பான இளைஞர்,யுவதிகளையும்  பிரதேச மற்றும்  மாவட்ட ரீதியாக சமய பெரியார்கள்,அறிஞர்கள் மற்றும்  சமூக ஆர்வாளர்களையும் தன்னகத்தே உள்ளடக்கிய தூர நோக்குடனான ஒரு கட்சியாகும்.
இக் கட்சியின் ஸ்தாபக தலைவரான  மொஹிடீன் பாவா அவர்கள் நிதி,பொருளாதாரம்,திட்டமிடல் மற்றும் முதலீட்டு ஆலோசனை சார்ந்த துறைகளில்   பல வருட அனுபவ முதிர்ச்சியும்,பட்டய முகாமைத்துவக் கணக்காளரும்,மனித வளத்துறையில் முதுமானிப் பட்டமும் பெற்ற வருமாவார். அவர் தன்னுடைய தனிப்பட்ட முயற்சியால் இக் கட்சியை ஆரம்பித்து மிக குறுகிய காலத்தில் வளர்ச்சியடையச் செய்துள்ளார்.
எமது தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியானது தனது ஆரம்பம் காலம் தொட்டு இன்று வரையில் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வதற்கான வழி வகைகளை தனது கட்சியின் எதிர்கால நடவடிக்கையாகவும் குறிக்கோளாகவும் கொண்டு இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடை பெறவிருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு எமது கட்சி  வெற்றியீட்டுவதன் மூலம் பின்வரும் திட்டங்களை மக்களுக்கு பயனுள்ள வகையில் நிறை வேற்றித் தரும் என்பதை உறுதிப் படுத்துகின்றது. அந்த வகையில்  எமது கிழக்கு பிராந்தியத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு கட்சியின் பிரதான அபிவிருத்தி நோக்கமாக கொண்ட  திட்டங்களை பின்வருமாறு  முன்வைக்கின்றது.
அம்பாறை மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதே எமது தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் பிரதான நோக்கமாகும்அம்பாறை மாவட்டமானது 465757 வாக்காளர்களைக் கொண்டுள்ளதுடன் 7 பாராளுமன்ற உறுப்பினர்களையும் பொதுத் தேர்தல் ஒன்றின் மூலம் தேர்ந்தெடுக்கக் கூடிய ஆற்றலையும் கொண்டதாகும். இருப்பினும் ஏன் அம்பாறை மாவட்டம் சகல துறைகளிலும் பின் தங்கி காணப்படுகின்றது என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்விடயத்தை சரியாக ஆராய்ந்தால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள குறை நிறைகளை பற்றிய கரிசனையற்ற நிலையும் உரிய முறையில் நமது அரசியல் வாதிகளால் அரசாங்கத்துக்கு எடுத்துரைக்கப்படாமையுமே முழு முதல் பிரதான காரணமாகும்.
எனவேதான் இவ்வாறான நிலை தொடர்ந்தும் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு தவிர்ப்பதற்காகவே எமது தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இம்முறை இத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.
 *வீடுகள் இல்லாத பிரச்சினை
அம்பாறை மாவட்டத்தில் வீடுகள் இல்லாத பிரச்சினையானது மிக முக்கியமாக நம்மால் கவனிக்கப் பட வேண்டியுள்ளது . ஆயிரக் கணக்கான வறிய மற்றும் நடுத்தரக் குடும்பம்கள் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினைகளுள் இதுவும் ஒன்றாகும். இவ் அடிப்படைத் தேவைக்காக எம் மக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடாத்தியும் கூட அரசின் கண்களுக்கு புலப்படவில்லை . அது மட்டுமல்லாது சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் பல ஆண்டுகள் கடந்தும் கூட பொது இடங்களிலும் ,ஓலைத் தகரக் குடிசைகளிலும் வாழ்ந்து தமது வாழ்நாளும் தமது பிள்ளைகளின் எதிர்காலமும் சீரழிந்து வருவதாக புலம்புகின்றனர். இந்த அவல நிலையை இற்றைவரையில் எம்மால் அதிகாரம் பெற்ற அரசியல் வாதிகள் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் பொடுபோக்கான முறையில் செயற்பட்டு வந்திருக்கின்றார்கள். இதற்க்காக பாதிக்கப்பட்ட மக்களால் மேற்கொள்ளப் பட்ட எல்லாத் முயற்சிகளும் இன்றுவரை தோல்வியிலே முடிவடைதுள்ளது. எனவேதான் இப் பிரச்சினைக்கு தீர்வுகாணவே நமது கட்சி வீட்டுத் திட்டங்களை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது .இதன் மூலம் வீடில்லாப் பிரச்சினைக்குத் நிரந்தர தீர்வு காண முடியும் எனவும் நம்புகின்றது.
* இளைஞர் யுவதிகளின் வேலை இல்லாப் பிரச்சினை
பொதுவாக எமது அம்பாறை மாவட்டத்திலிருந்து தினசரி நூற்றுக் கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் தமது வறுமை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணாமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு கூலித் தொழிலாளர்களாகவும்,வீட்டுப் பனிப் பெண்களாகவும் போய்க் கொண்டிருக்கின்றனர். இவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் எதிர் நோக்கும் பிரச்சினை சொல்லில் வடிக்க முடியாதது. இதற்கான அடிப்படை காரணம் அவர்களுக்கு முறையான தொழில் நுட்ப ரீதியான பயிற்சிகள் வழங்கப் படாமையேயாகும் .அவ்வாறு பயிற்சிகள் வழங்கப்படும் பட்சத்தில் அவர்களை தகமையான ஒரு தொழில் சார்ந்த சான்றுதளுடன் வேலைக்குப் பயிற்றுவிக்கப்பட்டு அனுப்ப முடியும். மேலும் பெண்களுக்கு தாதியர் பயிற்ச்சி நெறிகளை பயிற்றுவிப்பதன் மூலம் அவர்களை ஒரு திருப்தியான தொழிலுக்கு அனுப்ப முடியும் இதன் மூலம் அவர்கள் கூடிய வருமானத்தையும் சம்பாதிக்க முடியும். இதற்காகவே நாம் தொழில் சார்த்த தொழில் நுட்பக் கல்லூரியுடன் தாதியர் பயிற்ச்சிக் கல்லூரி ஒன்றை நிறுவும் திட்டத்தையும் உள்ளடக்கியுள்ளோம்.
 * விவசாய அபிவிரித்தி
அம்பாறை மாவட்டத்தின் பிரதான தொழில் துறையாக காணப்படும் விவசாயம் இன்று எந்த அரசியல் வாதிகளின் கண்களுக்கும் தென்படாமல் உள்ளது. குறிப்பாக ஏழை விவசாயிகள் ஆயிரக் கணக்கில் பணத்தை செலவு செய்து விவசாயம் செய்த போதிலும் உரிய இலாபத்தைப் பெற முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
இதற்கான காரணம் உளவு இயந்திரம்களும்வேளாண்மை அறுவடை செய்யும் இயந்திரம்களும் ஒரு சிலரின் கைகளில் உள்ளதும் அவர்கள் நிர்ணயிக்கும் கட்டணமுமாகும் . இதற்கான ஒரே தீர்வு அரசாங்கம் இவ் இயந்திரம்களை குறிப்பிட்ட மானிய விலைக்கு விவசாயிகளுக்கு வழங்குவதே தீர்வாகும் .இதற்காக தயாரிக்கப் பட்ட பிரத்தியேக திட்டமொன்றை எமது கட்சி கொண்டுவரும்.
 * சுகாதார வசதி
அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக சில பகுதிகளில் உள்ள பிரதான பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது தரமான வைத்திய சாலைகளின் பற்றாக்குறையும் முறையான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கப் பெறாமையுமாகும் . விசேடமாக சம்மாந்துறை பொத்துவில்இறக்காமம் போன்ற பிரதேசங்களில் வாழும் ஆயிரக் கணக்கான மக்கள் தமது பிரதேசத்தில் சகல வசதிகளும் கொண்ட ஒரு வைத்திய சாலை இன்றி அல்லல் படுகின்றனர். இதற்காக சகல வசிதிகளும் உள்ளடங்களான வைத்திய சாலைகள் அமைபதற்கான திட்டம் ஒன்றையும் எமது கட்சி தயாரிக்கவுள்ளது.
ஆரம்பக் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் :
அரச,தனியார், மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அனுசரணையுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சாலைகள்.
1-நவீன வசதிகளைக் கொண்ட  டின் மீன் தொழிற்சாலை -
கடல் வள பிராந்தியமாக கொண்ட எமது அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் மற்றும் அதை சூழவுள்ள பிரதேசங்களில்  போதியளவு கடல் மீன்கள் கிடைப்பதன் நிமித்தம் மீன்களை டின்களில் அடைத்து அவற்றை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் பெருமளவிலான அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்ள வழிவகுத்தல் 
2- ஆடைத் தொழில் சாலை -  
தற்போதைய சூழ் நிலையில் அம்பாறை மாவட்டத்தில் ஏராளமான தமிழ்,முஸ்லிம்சிங்கள யுவதிகள் மிகத் திறமையும் ,ஆற்றலும் கொண்டவர்களாக தையல் பயிற்சிக் கலையில் முன்னேறியுள்ளனர் .ஆயினும் இவர்களது வாழ்வாதாரத்தை இலக்காக கொண்ட ஆடைத் தொழில் சாலை எதுவும் அம்பாறை மாவட்டத்தில் திட்டமிடப் பட்டு அமைக்கப் படவில்லை .இவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிராந்தியத்தில் ஆடைத் தொழிற் சாலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
3- கைப்பணிப் பொருள் உற்பத்திச் தொழில் சாலை -
கைவினை திறன் கொண்ட இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும்  வகையில்  காரைதீவு பிரதேசத்தில்  இத் தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 4- நன்நீர் மீன் வளர்ப்பு - 
நன்நீர் மீன் வளர்ப்பில் எமது பிரதேசம் பாரிய வீழ்ச்சி அடைந்து வருவதால்,எதிர்காலத்தில் இம்மீன் வளர்ப்பு திட்டத்தை இறக்காமப் பிரதேசத்தில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
5- காகித உற்பத்திச் தொழில் சாலை
கிழக்கிலங்கையின் புரதான விவசாய வலயமாக கருதப் படும் சம்மாந்துறைப் பிரதேசம் காகித உற்பத்தி தொழில் சாலைக்கு பொருத்தமான இடமாக கருதப் படுவதால் சம்மாந்துறை பிரதேசத்தில் நவீன கடதாசி உற்பத்திச் தொழில் சாலை அமைக்கும் திட்டம்    
6- 
முந்திரிகை விதை பன் படுத்தல் தொழில்
நீலாவனை  பிரதேசத்தில் முந்திரிகை விதை பன் படுத்தல் தொழில் சாலையை கொண்டு வருதல்
7- பாரிய அரிசி உற்பத்தி ஆலை
அட்டாளைச்சேனை நகருக்கு பாரிய அரிசி உற்பத்தி ஆலை அமைப்பதுடன் நெல் களஞ்சியப் படுத்தும் வசதிகள் செய்து  கொடுத்தல்
8.கழிவுப் பொருள் பயளை உற்பத்திச் தொழில் சாலை
நமது சுற்றாடலை மாசு படுத்தும் கழிவுப் பொருட்களை பாவித்து ளை உற்பத்திச் தொழில் சாலை நட்பிட்டிமுனையில் அமைக்கும் திட்டம். இதன் மூலம் வருமானமும் சூழல் சுற்றாடலும் தூய்மையான முறையில் பேன வாய்ப்பு ஏற்ப்படும்
மேற்கூறிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதன் மூலம் சுமார் 
10000 
பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமன்றி
மகளிர் கூட்டுறவு கைப்பணிப் பொருள் உற்பத்தி திட்டம் , இதன் மூலம் வீட்டில் இருந்த படி வருமானம் ஈட்டக் கூடிய வாய்ப்புகள்
அரசாங்க ஓய்வு பெற்ற ஊழியர்களுக்காக ஒவ்வொரு  பிரதேசத்திலும் ஊழியர் ஓய்வு மண்டபம்,   அதனுடன் பொழுது போக்கு, நூலக வசதியும் அடங்களாக அமைத்தல்
வசதி குறைந்த மாணவர்களுக்கான இலவச கணணி கற்கை வசதிகளை செய்து கொடுத்தல்
 பொத்துவில் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கான ஊக்குவிப்புத் திட்டத்தை முன்னெடுத்தல்
*கல்முனைப் பிரதேசத்தில் அதி நவீன இலத்திரனியல் பயிற்சி நிறுவனம் ஓன்று அமைதல்இத் திட்டத்தினால் இதில் பயிற்சி  பெற்று வெளியேறு வோருக்கு  வெகு இலகுவில் வெளிநாடுகளில் நல்ல தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும்
* எதிர்காலத்தில் நாம் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினையான வீடில்லாப் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு 1500 க்கும் மேற்பட்ட வீடுகள் மூன்று தொடர் மாடிகளைக் கொண்ட வீட்டு மனைகள் அமைத்து வறிய குடும்பங்களுக்கு வழங்குதல்
*மீனவர்களுக்காக மீன் பிடித் தொழிலை நவீன மயப் படுத்தலுக்கான வசதிகள் செய்து தரல் 
*சமூர்த்தி உதவி பெறும் குடும்பத்தில் உள்ள படித்த பிள்ளைகளுக்கு தொழில் வாய்ப்பில் முன்னுருமை வழங்கல் 
என பல்வேறு பட்ட அபிவிருத்திகளை மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் எமது கட்சியான தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி முன் எடுத்துச் செல்ல இம்முறை முதன் முதலாக திக்காமடுள்ள தேர்தல் மாவட்டத்தில் மட்டும் தனது  கன்னிப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
எமது கட்சியின் இத் தொழிற்சாலைகளை அமைத்து கிழக்கை ஒரு ஏற்றுமதி வலயமாக மாற்ற கொண்டு வரவுள்ள திட்டங்களுக்காக பன்நாட்டு முதலீட்டாளர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடாத்தி எமது கட்சி வெற்றியும் கண்டுள்ளது. தற்போது  அம் முதலீட்டாளர்களும் எமது பகுதியில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ள இச் சந்தர்ப்பத்தில்  இத் திட்டங்களை நிறைவேற்றுவதாயின் அரசியல் அதிகாரத்துடன் மாத்திரமே எம் மக்களுக்கு பெற்றுத்தர முடியும் என்பதும் இங்கு நினைவு படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். எனவேதான்  கடந்த காலங்களில் நாம் அதிகாரம் வழங்கிய கட்சிகள் அல்லது எமது பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சேவைக் காலத்தில் மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில்  இவ்வாறான திட்டங்களை கொண்டுவரவும் இல்லை அல்லது எதிர்காலத்தில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்யவில்லை
மாறாக தங்களுடைய சேவைக் காலத்தில் பலவிதமான தவறுகளை நிகழ்த்திவிட்டு இம்முறையும் மக்களை ஏமாற்றும் கைங்கரியத்துடன் மீண்டும் பதவிக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். அவர்களின் ஏமாற்று வலையில் அகப்படாமல் நாம்  சிந்தித்து செயற்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.
எனவேதான் அன்பார்ந்த வாக்காளர்பெருமக்களே கடந்த பல தசாப்தங்களாக நாம் விட்ட தவறினால் இன்று எமது வாழ்வாதாரமும் வாழ்வும்,சூழலும் பாரிய பின்னடைவிலுள்ளது அதுமட்டுமல்லாமல் எதிர்காலமும் கேள்விக் குறியாகவே உள்ளது. அதானால் செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்து எம் எதிர்கால சந்ததிகளின் வாழ்வை இருளாக்காமல்  "சுபீட்சமான" எதிகாலத்தை நோக்கி பயணிக்க
எமது "தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் கரங்களை பலப்படுத்த முன்வாருங்கள்எதிர்காலம் நமதே!  வெற்றிப் பாதையை நோக்கி பயணிப்போம்...
மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றம் தரும்
வெற்றிப் பயணம்  எமது ஒட்டகத்துடன் தொடரட்டும்...
                                                   நன்றி
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top