அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் ஏற்பாட்டில்
கரைவாகு தெற்குப் பிரிவுக்கான காதி நீதிமன்றக் கட்டடம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின்
ஏற்பாட்டில் சாய்ந்தமருதை அடுத்துள்ள பொலிவேரியன் குடியேற்றக் கிராமத்தில்
சாய்ந்தமருது கரைவாகு தெற்குப்
பிரிவுக்கான காதி நீதிமன்றக் கட்டடம் ஒன்று நிர்மானிக்க்ப்பட்டு
வருகின்றது.
சுமார் 60 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படும் இக் காதி நீதிமன்றக் கட்டடம்
தற்போது முகட்டு வேலைகள் ஆரம்பித்த நிலையில் காணப்படுகின்றது.
சாய்ந்தமருது கரைவாகு தெற்குப் பிரிவுக்கான காதி நீதிமன்ற நீதிபதியாக டாக்டர் ஐ.எம்.
ஷெரிப் (ஜே.பி) அவர்கள் கடமை செய்து வருகின்றார்கள்.
0 comments:
Post a Comment