தேசியப் பட்டியலுக்கு கட்சி ரீதியாக பெயரிடப்பட்டுள்ள
முஸ்லிம்களின் பெயர் விபரம்
தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய மூன்று பிரதான அரசியல் கட்சிகள் சார்பாக 15 முஸ்லிம்கள் பெயரிடப்பட்டிருக்கிறார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நான்கு முஸ்லிம்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக இரண்டு முஸ்லிம்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக இரண்டு முஸ்லிம்களும் பெயரிடப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக மூன்று முஸ்லிம்களும் தேசிய காங்கிரஸ் சார்பாக ஒரு முஸ்லிமும் விமல்வீரவன்சவின் கட்சி சார்பாக ஒரு முஸ்லிமும் பெயரிடப்பட்டுள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணி சார்பாக இரண்டு முஸ்லிம்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
கட்சி ரீதியாக பெயரிடப்பட்டுள்ள முஸ்லிம்களின் பெயர் விபரம் வருமாறு,
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
மொஹமட் தம்பி ஹசன் அலி
(கட்சியின் செயலாளர் நாயகம்)
நிஸாம் காரியப்பர் (கல்முனை மாநகர சபை மேயர்)
அப்துல் ரவூப் அப்துல்
ஹபீஸ் ( அமைச்சரின் ஊடக
இணைப்புச் செயலாளர்)
முஹமட் ஹபீர் முஹமட்
சல்மன் (இலங்கை காணி மீட்பு அதிகார சபையின் தலைவர்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
அஹமட் மொஹமட் ஜெமீல்
(கிழக்கு மாகாண சபை உறுப்பினர்)
வை.எல்.சாஹுல் ஹமீட்
(கட்சியின் செயலாளர் நாயகம்)
ஐக்கிய தேசியக் கட்சி
முஹம்மத் அசாத்சாலி
(மத்திய மாகாண சபை உறுப்பினர்)
முஹமட் ரவூப் முஹமட்
நாஜா (நல்லாட்சிக்கான தேசிய
முன்னணியின் பொதுச் செயலாளர்)
ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பு
ஏ.எச்.எம்.பௌஸி (அமைச்சர்)
மொஹமட் குஷேன் ரிஸ்வி
ஷெரீப் (டாக்டர்)
பைசர் முஸ்தபா (சட்டத்தரணி, முன்னாள் பிரதி அமைச்சர்)
எம்.எச்.எம்.முஸம்மில்
தேசிய காங்கிரஸ்
எம்.எச்.எம்.உதுமா லொப்பை
(கிழக்கு மாகாண சபை உறுப்பினர்)
மக்கள் விடுதலை முன்னணி
அல்ஹாச் மொஹமட் இப்றாஹீம் (வர்த்தகர்)
எச்.எப்.ஷிப்லி மௌலானா (ஆங்கில ஆசிரியர்)
0 comments:
Post a Comment