முதியோர்கள் தன்மானத்துடனும் தன்நிறைவுடனும்
வாழ உதவுவது சமூகத்தின்
கடமை
2015.07.23ம்
திகதி நடைபெற்ற சாய்ந்தமருது பிரதேச முதியோர் சம்மேளனக் கூட்ட அறிக்கை
முதியோர்கள்
தன்மானத்துடனும் தன்நிறைவுடனும் வாழ உதவுவது சமூகத்தின் கடமை இலங்கையில் வாக்காளர்களில் 20 சதவீதத்திற்கு அதிகமானோர் முதியோர்கள்
சாய்ந்தமருது
பிரதேச முதியோர் சம்மேளனக் கூட்டத்தில் தெரிவிப்பு
சாய்ந்தமருது
பிரதேச முதியோர் சம்மேளனக் கூட்டம் 23.07.2015 வியாழன் காலை சாய்ந்தமருது பிரதேச செயலக
கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் ஐனாப் எம்.எம்.எம். அக்பர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்
அனைத்து கி.சே.பிரிவு முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். பிரதேச முதியோர் மேம்பாட்டு
உத்தியேகத்தர்; ஐனாப் அஹ்ஷன் அஸீஸ் இங்கு பேசுகையில் சம்மேளனத்தின் நடைமுறைகள் எதிர்காலத்
திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்தார்;.
சாய்ந்தமருது
சிரேஷ;ட பிரiஐகள் அமைப்பின் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம். ஜெமீல் அவர்கள் உரையாற்றுகையில் ‘முதியோர் என்போர் பிரயோசனம் அற்ற வறியோர் என்ற
மன நிலையில் இருந்து விடுபட வேண்டும். இலங்கையில் 20 சதவீதத்திற்கு அதிகமான வாக்காளர்கள்
முதியோர்களாகும். எதிர்காலத்தில் (2050இல்) இச்சதவீதம் 50 வீதமாக மாறும். முதியோர்கள்
எல்லோரும் வறியோர்கள் அல்ல. அவர்களில் தனவந்தர்கள்,புத்திஜீவிகள்,தொழில்நுட்ப வல்லுனர்கள்
எனப் பல் வகை திமையாளர்கள் உள்ளனர்.
இவர்களை
சமூகம் இனம் கண்டு பிரயோசனப்படுத்தவேண்டும். முதியோர்கள் தன்நம்பிக்கையுடனும் பொறுமையுடனும்
வாழ்ந்து தமது எஞ்சிய காலத்தை தன்மானத்துடனும் கௌரவத்துடனும் வாழவேண்டும். அதற்கு சமூகமும்
ஒத்துழைக்க வேண்டும். அதேவளை அதிகாரத்தில் உள்ளோர் முதியோர் நலனில் மிகுந்த அக்கறை
செலுத்த வேண்டும்’. எனக்
குறிப்பிட்டார்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
சம்மேளனத்திற்கான காரியாலயம் அமைத்தல்
முதியோர் தொடர்பான தகவல்கள் சேகரித்து
ஆவணப்படுத்தல்
முதியோருக்கும் இளைஞர்களுக்கும்
அறிவூட்டலகள் செய்தல்
முதியோர் பகல் நேர கவனிப்பு நிலையம்
ஸ்தாபித்தல்
சாய்ந்தமருது வைத்திய சாலையில்
முதியோர் பிரிவும் நடமாடும் சேவையும் ஏற்படுத்த மாகாண சபையைத் தொடர்பு கொள்ளல்
எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி
முதியோர் தினத்தை வெகுவிமர்சிகையாக நடாத்துதல்.
செயலாளர்
எம்.ஐ.எம். அலியார் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் முடிவுற்றது.
0 comments:
Post a Comment