கம்பளை பள்ளிவாசலுக்கு பல தடவைகள் உதவிகோரியும்
பதிலளிக்காக அமைச்சர்
ரவூப் ஹக்கீம்
பள்ளிவாசலுக்குச் சென்றபோது
திருப்பியனுப்பட்டதாக
கம்பளை நகரசபையின் பிரதி தலைவர் மின்ஹாஜ் தெரிவிப்பு!
கம்பளை
பள்ளிவாசலுக்கு பல தடவைகள் உதவிகோரியும் பதிலளிக்காக
அமைச்சர் ரவூப்
ஹக்கீம் அண்மையில்
அந்த பள்ளிவாசலுக்குச்
சென்றபோது திருப்பியனுப்பட்டதாக கம்பளை
நகரசபையின் பிரதி தலைவர் மின்ஹாஜ் தெரிவித்துள்ளார்
கம்பளை
நகரசபையின் பிரதி தலைவரான மின்ஹாஜ் ஊடகங்களுக்கு
வழங்கியுள்ள விஷேட செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர்
மேலும் கூறியுள்ளதாவது;
அவர்
வெளியிட்டுள்ள செவ்வியில், கடந்தமுறை இடம்பெற்ற பாராளுமன்ற
தேர்தலில் அமைச்சர்
ஹக்கீம் அவர்களின்
வெற்றிக்காக தான் களமிறங்கியதாகவும் கடந்த நான்கு
வருடங்களில் தங்களை தொலைபேசியில்கூட அவர் தொடர்புகொள்ளவில்லை
எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தங்களின் கம்பளை
தொகுதியை அமைச்சர்
ஹக்கீம் எட்டிக்கூட
பார்க்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளதுடன் தங்கள் ஊரில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த பள்ளிவாசல் ஒன்றுக்காக
உதவி கோரி
பலதடவைகள் அமைச்சர்
ஹக்கீமுக்கு தகவல் அனுப்பியும் அவர் எவ்வித
உதவியும் செய்ய
முன்வரவில்லை எனவும் அவர்
மேலும் தெரிவித்தள்ளார்.
இம்முறை
கண்டி மாவட்டத்தில்
தேர்தலில் போட்டியிடுவதால்
கம்பளை நகரில்
அமைந்துள்ள மேல் குறிப்பிட்ட உதவிகோரப்பட்ட பள்ளிவாசலுக்கு
அமைச்சர் ஹக்கீம்
அண்மையில் வருகை
தந்ததாகவும், கடந்தமுறை செய்த அதே வேலையை
இம்முறையும் செய்ய வந்துள்ளீர்களா என அவரை
அங்கிருந்து அவரை திருப்பியனுப்பியதாகவும்
கம்பளை நகரசபை
பிரதித்தலைவர் மேலும் தெரிவித்தார்.
மக்களுக்கும்
சேவை செய்யாத
பாராளுமன்றத்திலும் முஸ்லிம்களுக்காக வாய்திறக்காத ஹக்கீம் போன்றவர்களை மக்கள்
நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்
என கம்பளை
நகர சபை
தேர்தலில் தொடர்ந்து
அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்ற கம்பளை
நகர சபையின்
பிரதி தலைவரான
மின்ஹாஜ் தனது செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
https://youtu.be/egr3-ihWojc
0 comments:
Post a Comment