திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில்
SLMCக்கும் UNPக்கும் இடையே இழுபறி நிலை
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஐக்கிய
தேசியக் கட்சி வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் இச் செய்தி எழுதும் வரை இழுபறி
நிலையில் இருந்து கொண்டிருப்பதாக நமபகமாகத் தெரியவருகின்றது.
இம்மாவட்டத்தில் இரு கட்சிகளும் இணைந்து வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் போது
முஸ்லிம் காங்கிரஸுக்கு 5 முஸ்லிம் வேட்பாளர்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 5
வேட்பாளர்களும் பகிர்ந்து கொள்வது என்ற உடன்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் தமது 5
வேட்பாளர்களில் ஒரு வேட்பாளரை சிங்களவரைக் கொண்டு நியமிக்க முற்பட்டிருப்பதினாலேயே இந்த
இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் அதிக செல்வாக்கு கொண்டிருபதாகக் கூறும் முஸ்லிம் காங்கிரஸ் அவர்களது வேட்பாளர் பட்டியலில் சிங்களவர் ஒருவரை நியமிக்காமல் 5 வேட்பாளர்களையும்
முஸ்லிம்களைக் கொண்டே பூர்த்தி செய்யப்படல் வேண்டும் என திகாமடுல்ல மாவட்டத்தின் ஐக்கிய
தேசியக் கட்சியின் அமைப்பாளர் தயா கமகே கூறி இதில் பிடிவாதமாக இருந்து கொண்டிருப்பதாகக்
கூறப்படுகின்றது.
இது விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க
தலையிட்டு தீர்வு காண வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment