பிரசாரத்தின் போது
தொண்டரை தாக்க முயன்ற
மஹிந்த ராஜபக்ஸ (பரபரப்பு
வீடியோ)
பொதுத்தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய
மக்கள் சுத்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜப க்ஸஅக்குரஸ்ஸ நகரத்துக்கு
செவ்வாய்க்கிழமை சென்றார். அங்கு பழைய
பஸ்தரிப்பிடத்திலேயே பிரசாரக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டிருந்தன.
தேர்தல் பிரசாரக்கூட்டம் மாலை 4 மணிக்கு ஆரம்பமானது. மஹிந்த ராஜபக்ஸ மாலை 5.30க்குத்தான் வருகைதந்தார். குண்டுகள் துளைக்காத பென்ஸ்
காரில் வந்திறங்கிய அவர், குழுமியிருந்த மக்களுக்கு இடையிலேயே மேடையை நோக்கி சென்றார்.
அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர், மஹிந்த ராஜபக்ஸவின் கையை பிடித்துள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில் ஏதோவொரு குழப்பத்தில் இருந்த மஹிந்த ராஜபக்ஸவின் முகத்தில்
ஒருவிதமான மாற்றம் திடீரென ஏற்பட்டது. தன் கையை பிடித்தவரை நோக்கி மஹிந்த ராஜபக்ஸ
கையை ஓங்கினார. மஹிந்த, தாக்குதல் நடத்த முயற்சித்த போதும் அவருக்கு பாதுகாப்பு வழங்கிகொண்டிருந்த
பாதுகாப்பு தரப்பைச்சேர்ந்த மூவரும் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்காக மஹிந்த
ராஜபக்ஸவை பின்தள்ளிவிட்டனர். அவர் விழ பார்த்தார். எனினும், மஹிந்தவுக்கு பின்னால் இருந்த பாதுகாப்பு
தரப்பினர் மஹிந்தவை பிடித்துவிட்டனர்.
அதன் பின்னர், அக்குரஸ்ஸ, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அக்குரஸ்ஸ வேட்பாளர் மனோஜ் சிறிசேன,
மஹிந்த ராஜபக்ஸவை
மேடைக்கு அழைத்துசென்றார். அந்த தேர்தல்
பிரசாரக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஸ சுமார் 25 நிமிடங்கள் உரையாற்றினார். எனினும், இந்த சம்பவம் தொடர்பில் எதுவுமே கூறவில்லை.
https://youtu.be/NKp_3DcLpGo
https://youtu.be/NKp_3DcLpGo
0 comments:
Post a Comment