முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில்
நாடாளுமன்றம் சென்றால்காதை அறுப்பேன்
அமைச்சர் ஹக்கீம்
சவால்!
நான் நாடாளுமன்றம் சென்றால்
ஹக்கீம் வீடு செல்லத் தயாரா?
இஸ்மாயிலும் சவாலுக்கு சவால்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக இம்முறை திகாமடுல்ல மாவட்டத்தில்
போட்டியிடும் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தனது பதவியை இராஜினாமா செய்யாமல்
தேர்தல் வேட்பாளர் படிவத்தில் ஒப்பமிட்டுள்ளார். இதற்காக வழக்கு தொடங்குவதற்கான ஏற்பாடுகள்
தற்போது நடைபெற்று வருகின்றன. இவர் தற்செயலாக தெரிவானாலும் நாடாளுமன்றம் செல்ல முடியாது.
அவ்வாறு செல்வாராயின் எனது காதினை அறுப்பேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை. என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
.ஐக்கிய
தேசிய முன்னணியில்
ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
கட்சி சார்பாக
அம்பாறை மாவட்டத்தில்
போட்டியிடும் மூன்று வேட்பாளர்களின் வெற்றிக்காக, அட்டாளைச்சேனை
பிரதான வீதி
தபாற்கந்தோருக்கு அருகாமையில் இடம்பெற்ற கூட்டத்தில்
கலந்து கொண்டு
உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
கிழக்கு
மாகாண சபை
உறுப்பிரும் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான
ஏ.எல்.எம்.நஸீர்
தலைமையில் நடைபெற்ற
இக்கூட்டத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
அட்டாளைச்சேனை
பிரதேசத்துக்கு இம்முறை தேசியப் பட்டியல் மூலம்
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும். இதில்
எந்தவிதமான சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை.
இவை கட்சியின்
தலைமையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களாகும்.
இம்முறை
அம்பாறை மற்றும்
மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நாடாளுமன்ற தேர்தல்களுக்காக
வேட்பாளர்களை தெரிவு செய்ததில் பல விமர்சனங்கள்
தெரிவிக்கப்படுகின்ற நிலைமையில் மட்டக்களப்பு
மாவட்டத்தில் எல்லா வேட்பாளர்களும் புதியவர்களாகவும் அம்பாறை மாவட்டத்தில் பழைய
முகங்களா?
என்ற விமர்சனங்கள்
பரவலாக எழுந்துள்ளது. நிந்தவூருக்கு
தேர்தல் மூலமாகவும்
தேசியப்பட்டியல் ஊடாகவும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்
வழமையாக வழங்கப்பட்டு
வந்துள்ளதாகவும் விமர்சிக்கின்றனர்.
திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தனது பதவியை இராஜினாமா செய்யாமல் தேர்தல் வேட்பாளர் படிவத்தில் ஒப்பமிட்டுள்ளார். இதற்காக வழக்கு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவர் தற்செயலாக தெரிவானாலும் நாடாளுமன்றம் செல்ல முடியாது. அவ்வாறு செல்வாராயின் எனது காதினை அறுப்பேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அமைச்சர்
ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதேவேளை. நான் நாடாளுமன்றம் சென்றால் ஹக்கீம் வீடு செல்லத் தயாரா? இவ்வாறு
அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் சவால்விடுத்துள்ளார்.
அமைச்சரின் சவால் குறித்து வேட்பாளர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நான்
பாராளுமன்றம் சென்றால் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
வீடு செல்லத்
தயாரா ? எதிர்வரும் பொதுத் தேர்தலில்
நான் வெற்றி
பெற்று பாராளுமன்றம்
செல்வேன் என்பது
உறுதியாகி விட்டது.
அதனை உறுதிப்படுத்தும்
வகையிலேயே அமைச்சர்
ரவூப் ஹக்கீம்
அவர்களும் கருத்து
வெளியிட்டுள்ளார் .
“இந்த
மாவட்ட மக்களின்
நாடித் துடிப்பை
நேரடியாக வந்து
பார்த்து விட்டே
அவர் இந்த
கருத்துக்களை தெரிவிக்கிறார். எனது வெற்றியினை முறியடிக்க
அவர் கடும்
பிரயத்தனமும் எடுத்து வருகிறார். அதன் பின்னணியிலேயே
நான் வென்றாலும்
பாராளுமன்றம் செல்ல முடியாது என்கின்ற புதுக்கதையினை
அவர் மக்கள்
மத்தியில் கட்டவிழ்த்துள்ளார்.
அவ்வாறாயின்
நான் பாராளுமன்றம்
சென்றால் ஹக்கீம்
தனது அரசியல்
பதவிகளைத் துறந்து
வீடு செல்லத்
தயாரா? என்று நான்
சவால் விடுக்க
விரும்புகிறேன்.
சட்டத்துறையில்
முதுமாணி பட்டம்
பெற்றுள்ள அமைச்சர்
ரவூப் ஹக்கீம்
நான் சட்ட
ரீதியற்ற முறையில்
தேர்தலில் போட்டியிட்டிருந்தால்
அவர் நீதிமன்றம்
செல்ல முடியும்.
நானும் அதற்கு
தயாரகவுள்ளேன். ஆனால் நீதிமன்றம் செல்லாமல் மேடைகளில்
பேசி மக்களை
குழப்புகிறார். இதன் மூலம் வீண் வதந்திகளை
பரப்பி மக்கள்
காங்கிரஸிற்கு அம்பாறை மாவட்ட மக்கள் வாக்களிப்பதனை
தடுத்து நிறுத்த
முயற்சிக்கின்றார்.
இந்த
வதந்தியினை அம்பாறை மாவட்ட மக்கள் ஒருபோதும்
நம்பமாட்டார்கள். ஆனால் இவரது இந்த உரை
மூலம் அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸ் ஒரு
ஆசனம் பெறுவதும்
நான் பாராளுமன்றம்
செல்வதும் உறுதியாகி
விட்டதையே பறைசாற்றுகிறது”
என்றும் தெரிவித்துள்ளார்ர்.
0 comments:
Post a Comment